ஐஸ்க்ரீம்கள் விலை உயர்வு..!
மத்திய நிதி அமைச்சகம் ஐஸ்கிரீம்க்கான ஜி.எஸ்.டி. வரி குறித்து விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “ஏற்கனவே தயாரிக்கப்பட்ட ஐஸ்கிரீம்களை விற்பனை செய்யும் பார்லர்கள் சேவை வழங்கும் நிறுவனமாக கருத முடியாது. அவர்கள் எந்தவிதமான சமையலிலும் ஈடுபடுவதில்லை. ஆனால் ஐஸ்கிரீம் என்ற ஒரு பொருளை வழங்குகின்றனர்.
சேவையை வழங்கவில்லை. அதன்படி, பார்லர் அல்லது அது போன்ற விற்பனை நிலையம் மூலம் விற்கப்படும் ஐஸ்கிரீம்களுக்கு 18% ஜிஎஸ்.டி விதிக்கப்படும். உணவு டோர் டெலிவெரி செய்யும் சேவைகளுக்கு உணவகங்களை போல 5% ஜி.எஸ்.டி., பொருந்தும் என கூறப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த வரி உயர்வு அறிவிப்பினால் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் ஐஸ்க்ரீம்களின் விலை உயரும் என்பது தவிர்க்க முடியாதது.