அனைத்து வங்கி வாடிக்கையாளரும் பயன்பெற ஐசிஐசிஐ வங்கியின் ‘ஐமொபைல் பே’..!
ஐசிஐசிஐ வங்கி தனது மொபைல் வங்கி செயலியான ‘ஐமொபைல் பே’-ன் செயல்பாட்டில் சில மாற்றங்களை செய்து, எந்தவொரு வங்கியைச் சேர்ந்த வாடிக்கையாளரும் பணப்பரிமாற்றம், வங்கிச் சேவைகளை பெறும் வசதியை சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.
எந்த கட்டணச் செயலியின் க்யூஆர் கோடு ஆக இருந்தாலும் வாடிக்கையாளர்கள் ஸ்கேன் செய்ய அனுமதித்து தானாகவே எந்தவொரு யுபிஐ ஐடி, வங்கிக் கணக்குக்கும் இந்த செயலி மூலம் இலவசமாக பணப்பரிமாற்றம் செய்ய முடியும்.
மேலும் பெட்ரோல் பங்குகள், மளிகைக் கடைகள், உணவகங்கள், மருந்தகங்கள், மல்டிபிளெக்ஸ்களில் இந்த செயலியை பயன்படுத்தி பயனர்கள் பணம் செலுத்த முடியும். மேலும் இத்துறையில் முதன்முதலாக ‘பே டூ கான்டாக்ட்’ அம்சத்தை எளிதாக பயன்படுத்தும் வசதியை இச்செயலி அறிமுகப்படுத்தியுள்ளது. அத்துடன் பயன்பாட்டு கட்டணங்கள், மொபைல் போன் ரீசார்ஜ், சிபில் ஸ்கோர் சரிபார்ப்பு உள்ளிட்டவற்றை பயனர்கள் மேற்கொள்ளவும் இந்த செயலியில் வசதி உண்டு. அனைத்து வங்கி வாடிக்கையாளர்களும் ‘ஐமொபைல் பே’ செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும்.