Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

கிறிஸ்தவ தேவாலயங்களில் ஸ்ரீரங்கத்தின் சுரூபங்கள்!(வீடியோ)

https://www.youtube.com/watch?v=Us64LPhgZFo&t=94s

 

கிறிஸ்தவ தேவாலயங்களில் ஸ்ரீரங்கத்தின் சுரூபங்கள்!

தென் இந்தியாவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் கிறிஸ்தவ வீடுகளில் வழிபாட்டிற்கு உள்ள சுரூபங்கள் பெரும்பாலும் திருச்சி, ஸ்ரீரங்கம், மேலூரில் உள்ள மேலத் தெருவில் தான் வடிவமைக் கப்படுகிறது.

இயேசு கிறிஸ்து, வேளாங்கண்ணி மாதா தொடங்கி லூர்து மாதா, இமாகுலேட் மாதா, ஆண்டனி, ஜோசப் முதல் சென்பியோ, அசிசி, தாமஸ், ஜீடு என 90 சதவீத வழிபாட்டிற்குரிய சுரூபங்கள் இங்கு வடிவமைக்கப்படுகின்றன. தமிழகம் மட்டுமின்றி கேரளா, புதுச்சேரி, கோவா, ஆந்திர, தெலுங்கான, கர்நாடக, குஜராத் உட்பட பல்வேறு மாநிலங்களுக்கும் இங்கு தயாரிக்கப்படும் சுரூபங்கள் தான் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

30 ஆண்டுகளாக கிறிஸ்தவ உருவச் சுரூபங்களை செய்து, தெரசா மார்க்கெட்டிங் என்ற பெயரில் விற்பனை செய்து வரும் இந்நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான பிரசாத்குமார் கூறுகையில்,

“30 ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய அப்பா நேசன் பெர்ணான்டோ, அம்மா வனஜா இருவரும் இணைந்து கிருஸ்தவ உருவ சுரூபங்களை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். ஆரம்பத்தில் சிறிய அளவில், மண் சிற்பங்கள் செய்யத் தொடங்கியவர்கள், பின்னர் பிளாஸ்டோ பாரிஸில் சுரூபங்கள் செய்யத் தொடங்கினார்கள்.

தெரசா மார்க்கெட்டிங் நிறுவனத்தின் நிறுவனர்கள் நேசன் பெர்ணாண்டோ – வனஜா மற்றும் மகன் சசிகுமார்

சுரூபங்கள் செய்யும் பணியை அம்மாவும் தேவாலங்களில் பங்கு தந்தையர்களை சந்தித்து விற்பனை செய்யும் பணியை அப்பாவும் மேற்கொண்டு வந்தனர். கடந்த 2011ம் ஆண்டு முதல் நானும், என்னுடைய சகோதரர் சசிக்குமாரும் இணைந்து தொழிலை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடிவு செய்தோம். சசிகுமார் அம்மாவுடன் இணைந்து, சுரூபங்கள் வடிவமைத்தல், உருவாக்குதல் மற்றும் தயாரித்தல் பணிகளை மேற்கொள்ள, நான் அப்பாவுடன் விற்பனை பணிகளை மேற்கொண்டு வருகின்றேன்.

இந்தியாவில் கிறிஸ்தவ உருவ சுரூபங்கள் தயாரிப் பவர்களில் நாங்கள் மட்டுமே பிளாஸ்டோ பாரிஸ், பைபர், மார்பில், பாலிரெசின் உள்ளிட்ட அனைத்து வகை பொருட்களிலும் சுரூபங்கள் செய்கிறோம். அதுமட்டுமின்றி சிறியது முதல் பெரியது வரை என அனைத்து அளவுகளிலும் சுரூபங்கள் தயாரித்து தருபவர்கள் நாங்கள் மட்டுமே.

தமிழகத்தில் வேளாங்கண்ணி பெரிய விற்பனை நிலையமாக உள்ளது. கிட்டத்தட்ட 6 பெரிய நகரங்களின் விற்பனையினை வேளாங்கண்ணியில் மட்டுமே விற்பனை செய்து விடுவோம். அதற்கடுத்து கேரளா, கோவா உள்ளது. அனைத்து வெரைட்டிகளிலும் தயாரிப்பதால், வேளாங்கண்ணி, கோவா போன்ற சுற்றுலாத் தளங்களில் நடுத்தர குடும்பங்கள், பணக்கார குடும்பங்கள் என அனைத்து தரப்பி னரையும் எங்களால் வாடிக்கையாளர்களாக மாற்றிக் கொள்ள முடிகிறது.

பிரசாத் குமார்

தரமான, நேர்த்தியான சுரூபங்களை வாடிக் கையாளர்களுக்கு வழங்க உணர்வுடனும் அர்ப்பணிப்புடனும் உழைக்கிறோம். வருடத்தில் ஓரிரு மாதங் களை தவிர அனைத்து மாதங்களுமே பிசினஸ் பிசியாகவே இருக்கும். கடவுளின் கருணையால் தொழில் நல்ல முறையில் உள்ளது.

முழுநேர ஊழியர்களாக எப்போதும் 100 பேர் இருப்பார்கள். தற்போது, கொரோனா காலக்கட்டம் என்பதால், பிசினஸ் சுமாராகத் தான் உள்ளது, அரசு உத்தரவால் 50 ஊழியர்கள் தான் தற்போது வேலை பார்க்கிறார்கள். புதிதாக வேலைக்கு சேர்பவர்களுக்கு ஊதியத்துடன் ஒரு மாதம் பயிற்சி வழங்குகிறோம். பின்னர், அவர்களுக்கான வேலைகளை கொடுப்போம்.

கிருஸ்தவ சுரூபங்கள்மட்டுமின்றி எந்த வகையான சுரூபங்களும் ஆர்டரின் பெயரில் செய்து கொடுக்கிறோம். சமீபத்தில் 1000 சாய்பாபா உருவ சுரூபங்களை ஆர்டரின் பெயரில் செய்து கொடுத்தோம். சிறியது, பெரியது என மொத்தம் 1000 வெரைட்டிகளில் ரூ.60 முதல் ரூ.1,00,000 வரை மதிப்புடைய சுரூபங்கள் தயாரித்து விற்பனை செய்கிறோம்.

நாங்கள் தயாரிக்கும் சுரூபங்களை விற்பனை செய்ய இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் டீலர்ஷிப் கேட்கிறார்கள். உற்பத்தியை மேம் படுத்திய பின் டீலர்ஷிப் கொடுக்கலாம் என்ற எண்ணத்தில் உள்ளோம். 30 வருடம் கடந்தும் இன்றும் ஆழமரம் போல் எங்கள் தொழிலில் நாங்கள் நிலைத்து நிற்கிறோம் என்றால் எங்களின்
தரமே காரணம்” என்றார் புன்னகையுடன்.

தொடர்புக்கு: 99949 35384 , 89735 87420

www.therasamarkketing.com

Leave A Reply

Your email address will not be published.