திருச்சி மாவட்ட கட்டுமான பொறியாளர் சங்கத்தின் புதிய பொறுப்பாளர்கள் பதவியேற்பு
திருச்சி மாவட்ட கட்டுமான பொறியாளர் சங்கத்தின் 2022- 2023ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா ஹோட்டல் மாயாஸில் இன்று (15/05/2022) நடைபெற்றது.
இந்நிகழ்வில், புதிய நிர்வாகிகளாக எஸ்.கார்த்திக் தலைவராகவும், வெங்கடேசன் செயலாளராகவும், விஸ்வநாதன் பொருளாளராகவும், சுரேஷ்குமார் துணைத் தலைவராகவும், ஜெயராமன் இணை செயலாளராகவும் மற்றும் 15 செயற்குழு உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம் செய்து பொறுப்பேற்று கொண்டனர்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்று புதிய நிர்வாகிகளின் பணி சிறக்க வாழ்த்தி பேசினார்.