அதிகரிக்கும் நகர்புற வேலையின்மை.. கடந்த நவம்பரில் 8.96 சதவீதமாக உயர்வு!
இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் அறிக்கையின்படி, இந்தியாவின் வேலையின்மை விகிதம் மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு கடந்த நவம்பரில் 8.0 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கடந்த அக்டோபரில் வேலையின்மை விகிதம் 7.77 சதவீதமாக இருந்தது. கடந்த நவம்பரில் நகர்புற வேலையின்மை விகிதம் 7.21 சதவீதத்திலிருந்து 8.96 சதவீதமாக உயர்ந்துள்ளது.
அதேசமயம் கிராமப்புற வேலையின்மை விகிதம் 8.04 சதவீதத்திலிருந்து 7.55 சதவீதமாக குறைந்துள்ளது.