எளிதாக தொழில் தொடங்க வாய்ப்புள்ள நாடுகள் பட்டியலில், இந்தியா 136வது இடத்தை பெற்றுள்ளது. இந்தியாவில் புதிதாக தொழிலை தொடங் குவதற்கு குறைந்தபட்சம் 18 நாட்கள் தேவைப்படுவதாகவும் 10 வகையான வழிமுறைகளை தொழில்முனைவோர் பின்பற்ற வேண்டி இருக்கிறது என்றும் உலக வங்கி சமீபத்தில் தெரிவித்துள்ளது. இந்நிலையை போக்க தொழில் தொடங்குவதற்கான அனுமதி வழங்குவதை எளிமைப்படுத்த மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை விரைவில் அறிவிக்க உள்ளது.
தொழில் தொடங்க வெறும் இரண்டு விண்ணப்பங்கள் மூலமாக அனுமதி அளிக்கக் கூடிய ஐந்தே நாட்களில் குறைந்தபட்ச நடைமுறைகளை மட்டும் பின்பற்றி தொழில் தொடங்குவதற்கான நடைமுறையை மத்திய தொழில் விவகாரத்துறை அமைச்சகம் இன்னும் ஒரு மாதத்திற்குள் அறிமுகம் செய்ய உள்ளது.