வணிகர் நலவாரியத்தை சீரமைத்து, உறுப்பினர் சேவையை செம்மைப்படுத்தும் வகையிலும், வாரியத்தின் மூலம் நலத்திட்டங்களை செயல்படுத்த ஏதுவாகவும், சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தில் பதிவு பெற்று, விற்று முதல் அளவு ரூ.40 லட்சத்திற்கு உட்பட்ட சிறு வணிகர்கள், ஜிஎஸ்டி சட்டத்தின்கீழ் பதிவு பெறாத குறு வணிகர்கள் ஆகியோர் இந்த வாரியத்தில் உறுப்பினராக சேர ரூ.500 சேர்க்கை கட்டணத்தை வசூலிப்பதில் இருந்து ஜூலை 15 முதல் 3 மாதங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர www.tn.gov.in/tntwp/tamil என்ற இணையதளத்திற்கு சென்று பதிவு செய்யலாம். இணையதளத்தின் மூலம் பதிவு செய்ய இயலாதவர்கள் அருகில் உள்ள வணிகவரி வரிவிதிப்பு அலுவலகத்திற்கு சென்று பதிவேற்றலாம். அல்லது அந்த அலுவலகத்திலிருந்து விண்ணப்பப் படிவம் பெற்று பூர்த்தி செய்தும் விண்ணப்பிக்கலாம்.