பொருளாதாரம் வளர்ச்சிப் பாதைக்கு இந்தியா திரும்பியது -: ரிசர்வ் வங்கி ஆளுநர்
கறுப்பு பணத்தை ஒழித்தால் இந்தியாவின் பொருளாதாரம் உயரும் என்ற நம்பிக்கையுடன் 2016-ம் ஆண்டில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நாள் முதலே இந்திய பொருளாதாரம் வீழ்ச்சிப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது.
இந்தா சரியாயிடும்.. அந்தா சரியாயிடும் என சொல்லிக் கொண்டே அடுத்ததாக ஜிஎஸ்டியை அமல்படுத்தினார்கள். இது பட்ட காலிலே படும் என்ற கதையாகிப் போனது. பொருளாதார வீழ்ச்சி மிக மோசமானது. கொஞ்சம் பொறுத்துக்கோங்க.. எல்லாம் சரியாயிடும் என்றார்கள்.
‘உலகப் பொருளாதாரமே பாதிக்கப்பட்டிருக்கு இந்தியாவை மட்டும் குறை சொல்றீங்க ப்ளடி ஆண்டி இண்டியன்ஸ்” என்றனர் மத்திய அரசு ஆதரவாளர்கள். நடப்பு 2019-20 நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 9.6 சதவீதம் வரையில் வீழ்ச்சியைச் சந்திக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநரான சக்திகாந்த தாஸ், “இந்தியப் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட மிக வேகமாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதாக” கூறியுள்ளார். “நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியப் பொருளாதாரம் 23.9 சதவீதம் வீழ்ச்சி கண்டது. ஆனால் இப்போது பாதிப்புகள் குறைந்து வளர்ச்சிப் பாதையில் இந்தியா பயணிக்கத் தொடங்கியுள்ளது. நிலைமை சீராகி வருவதாகத் தோன்றினாலும் கொரோனா ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து நாம் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். கொரோனாவுக்கான மருந்து வரும் வரையில் வளர்ச்சிக்கான பாதையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.