கைக் கொண்ட பணம் கரைந்திடாதிருக்க சில வழிகள்..!
பணம் ஒருவரிடம் நீண்ட காலம் நிலைத்திருக்க சில வழிகாட்டல்களும் இருக்கவே செய்கின்றன.
1) எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரத்தில் சேமிப்பு மற்றும் முதலீட்டைத் தொடங்கிவிடுவது.
2) தொடங்கிய முதலீடு மற்றும் சேமிப்பை விடாப்பிடியாகத் தொடர்வது.
3) ஏற்கெனவே செய்து வரும் வேலையுடன், உபரியாக ஏதேனும் செய்ய முடியுமா என்பதைப் பரிசீலிப்பது.
4) தவறான நிதிமுடிவுகளை எடுக்காமல் தவிர்ப்பது.
5) தேவைக்கேற்ப நிதி ஆலோசனை பெறுவது.
6) 45 வயதுக்கு முன்பாகவே கடன்களிலிருந்து விடுபடுவது.
7) பணக்காரத்தன்மையை காட்டிக் கொள்வதற்காக, விரயமாகச் செலவு செய்வதைத் தவிர்ப்பது.
8) உழைக்கும் காலத்திலேயே இரண்டாவது வருமானத்துக்கு வழிவகை செய்வது.