60.20 சதவீத வளர்ச்சி கண்ட இந்திய ஏற்றுமதி..!
இந்திய நாட்டின் ஏற்றுமதி கடந்த மார்ச் மாதத்தில் 60.20 சதவீதம் வளர்ச்சி கண்டு 3,445 கோடி டாலரை எட்டியுள்ளது. இருப்பினும் கடந்த 2020-21ம் முழு நிதியாண்டில் இந்தியாவின் ஏற்றுமதியானது 7.26 சதவீத பின்னடைவைக் கண்டு 29,063 கோடி டாலராக சரிந்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் இறக்குமதி 53.74 சதவீதம் அதிகரித்து 4,838 கோடி டாலராக காணப்பட்டது.
நடப்பாண்டு மார்ச்சில் வர்த்தக பற்றாக்குறை கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில 998 கோடி டாலரிலிருந்து 1393 கோடி டாலராக உயர்ந்தள்ளது. கடந்த முழு நிதியாண்டில் வர்த்தக பற்றாக்குறையானது 16,135 கோடி டாலரிலிருந்து 9,856 கோடி டாலராக குறைந்துள்ளது.