இந்திய ரிசர்வ் வங்கி அனைத்து வணிக வங்கிகளும் தங்கள் இணையதள முகவரியையும், இணையதள சேவைகளையும் 2025 அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் bank.in என்ற Domainக்கு மாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. சமீப காலமாகவே வங்கிக் கணக்குகளில் பணம் திருடப்படுவது அதிகரித்து வருகிறது. bank.in டொமைன் என்பது அரசு அனுமதியுடன் வழங்கப்படும் பாதுகாப்பான டொமைனாகும்.
இது வாடிக்கையாளர்களை போலி வலைத்தளங்கள் போன்ற மோசடிகளிலிருந்து பாதுக்காத்துக் கொள்ள உதவுவதாக .தெரிவித்திருக்கிறார்கள். இதன்மூலம் வாடிக்கையாளர்கள் ஒரு வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை எளிதாக அடையாளம் காண முடியும் எனவும் தெரிவித்திருக்கிறார்கள்.
www.abc.com என்பதைப் பார்த்தால் அது நம் வங்கி தானா இல்லையா என குழப்பமாக இருந்தால் அதில் bank.in (www.abc.bank.in) என்பது இருந்தால் நம் வங்கி தான் என எளிமையாக கண்டறிந்து விடலாம் இதனால் பாதுகாப்பு உணர்வு மக்களிடையே உருவாகும் எனவும் தெரிவித்திருக்கிறார்கள். இந்த உத்தரவு முதற்கட்டமாக வணிக வங்கிகளில் செயல்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.