வட்டியில்லா கடன்
திருச்சி கலெக்டர் சிவராசு வெளியிட்ட அறிக்கையில், திருச்சி மாவட்ட விவசாயிகள் தங்கள் ரேஷன் நகல், நிலவுடமை தொடர்பான கணினி சிட்டா, பயிர்சாகுபடி தொடர்பாக கணினி சிட்டா, பயிர்சாகுபடி தொடர்பாக விஏஏ அடங்கல்சான்று, பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன் அருகேயுள்ள வேளாண் தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி மனு கொடுத்து பயிர்க்கடன் பெறலாம்.
கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இல்லாத விவசாயகள் உறுப்பினர் படிவத்தை பெற்று ரூ.100 பங்குத்தொகை மற்றும் நுழைவுக்கட்டணம் செலுத்தி மனுவை சமர்பித்து பயனடையலாம். மேலும் சங்க உறுப்பினர்களின் சேவைக் குறைபாடுகள் இருந்தால் 73387 49300 என்ற எண்ணில் திருச்சி மண்டல இணைப்பதிவாளரை அணுகலாம் .