ரூ.10,000த்திற்கு மேல் சென்றால் வட்டி வருவாய்க்கும் வரி!
சேமிப்பில் மிகவும் பாதுகாப்பாக கருதப்படுவது வங்கிகளில் செய்யப்படும் நிரந்தர வைப்புக் கணக்கு (FIXED DEPOSIT). எனினும் நீங்கள் நிரந்தர வைப்புத் தொகை தொடங்கிய வங்கி திவால் ஆனாலோ அல்லது வங்கி மீது விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் மூலம் வங்கியில் செய்த டெபாசிட் பணம் திரும்பப் பெற முடியாமல் போனாலோ டெபாசிட் செய்தவர்களுக்கு ரூ.5 லட்சம் வரையிலான தொகை இன்சூரன்ஸ் ஆக உடனடியாகக் கிடைக்கும்.
மத்திய அரசு DICGC சட்டத்தின் கீழ் செய்யப்பட்டு உள்ள புதிய மாற்றத்தின் படி வங்கி திவாலாகும் பட்சத்தில், வங்கி வாடிக்கையாளர்கள் கணக்கில் இருக்கும் பணத்திற்கு ரூ.5 லட்சம் வரையில் இன்சூரன்ஸ் மூலம் உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.
வருமான வரி சட்டப்பிரிவு 194-ன் கீழ் நிரந்தர வைப்பு நிதி கணக்குகள் மூலம் ஒருவருக்குக் கிடைக்கும் வட்டி ஆண்டுக்கு ரூ.10,000–த்திற்கு – மேல் சென்றால் அதற்கு வரி வசூலிக்கப்படும். பான் கார்டு இணைக்கப்பட்ட நிரந்தர வைப்பு நிதி கணக்கு என்றால் 10% தொகையை வங்கி வரியாக பிடித்தம் செய்யும். பான் கார்டு இணைக்கத் தவறினால் 20% தொகை வரியாக பிடித்தம் செய்யப்படும்.