குழந்தைகள் பெயரில் முதலீடு… முக்கிய விஷயங்கள்..!
குழந்தைகள் பெயரில் முதலீடு செய்யும்போது, பெற்றோர் அல்லது காப்பாளரின் ரிஸ்க் எடுக்கும் திறன், இலக்கை அடைய இன்னும் எத்தனை ஆண்டுகள் இருக்கிறது என்பதைப் பொறுத்து முதலீட்டை மேற்கொள்ள வேண்டும்.
குழந்தைகளின் கல்வி, திருமணத்துக்கு இன்னும் 10, 15 வருடங்களுக்குமேல் இருக்கிற பட்சத்தில் மட்டுமே நிறுவனப் பங்குகள் மற்றும் ஈக்விட்டி ஃபண்ட் அதுவும் மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்கு மற்றும் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும். இந்தக் கால அளவு ரியல் எஸ்டேட் முதலீட்டுக்கும் பொருந்தும்.
முதலீட்டுக் காலம் சுமார் 5 முதல் 8 ஆண்டுகள் என்கிறபட்சத்தில், லார்ஜ் மற்றும் மல்ட்டிகேப் பங்குகள், லார்ஜ் மற்றும் மல்ட்டி கேப் ஃபண்டுகள், தங்கப் பத்திரம் ஆகியவற்றில் முதலீடு செய்யலாம்.
செல்வமகள் சேமிப்புத் திட்டம், பொன்மகன் சேமிப்புத் திட்டம் (பொது சேமநல நிதி) ஆகியவை 15 ஆண்டுகள் லாக்இன் பீரியட் கொண்டவை என்பதைக் கவனத்தில் கொள்வது அவசியம். நிதி இலக்கை அடைய ஐந்தாண்டுகளுக்குள் இருக்கும்போது கடன் சந்தை சார்ந்த ஃபண்டு களில் முதலீடு செய்து வரலாம்.