Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

5ஜி எப்ப சார் வரும்?

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

5ஜி எப்ப சார் வரும்?

வேலை பெறுவது எளிது ! தலைசிறந்த வேலைவாய்ப்பு இணைதளம்

5ஜி தொலைதொடர்பு சேவை உலகின் பல்வேறு நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது. இந்தியாவில் 5ஜி சேவை எப்போது தொடங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், இந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் 2022 இறுதிக்குள் இந்தியாவில் 5ஜி சேவை நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில், மத்திய அமைச்சரவை தற்போது 5ஜி அலைக்கற்றை ஏலத்திற்கான பரிந்துரைகளுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. வருகிற ஜூலை மாதத்திற்குள் இந்த ஏலத்தை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் 5ஜி சேவை குறித்து மத்திய தகவல் தொடர்பு மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், 5ஜி அலைக்கற்றை ஏலம் ஜூலை மாத இறுதிக்குள் நிறைவடையும். ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்திற்குள் 5ஜி சேவைகள் அறிமுகப்படுத்தப்படும். மார்ச் 2023க்குள் இந்தியாவில் 5ஜி சேவைகள் முழுமையாக பயன்பாட்டுக்கு வரும் என கூறினார்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.