தங்கபத்திரத்தில் லாபம் பார்க்க சிறந்த முறை
‘‘தங்கப் பத்திரத்தில் முதலீடு மேற்கொள்ளும் போது, ஆர்.பி.ஐ வெளியிடும் தங்கப் பத்திரங்களை வாங்குவது லாபகரமாக இருக்கும். ஏனெனில், எட்டு வருடம் கழித்துக் கிடைக்கக் கூடிய முதிர்வு ஆதாயத் தொகைக்கு நீண்ட கால மூலதன ஆதாய வரிச் சலுகை இருப்பதால், அதன் பலன் முழுமையாக முதலீட்டாளருக்கு கிடைக்கிறது. இது தவிர, ஒவ்வோர் ஆண்டும் 2.5 % வட்டி தருவதும், ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும்போது யுனிட் ஒன்றுக்கு ரூ. 50 தள்ளுபடியும் ஆர்பி.ஐ அளிக்கிறது.
பங்குச் சந்தை மூலம் தங்கத்தில் முதலீடு செய்யும்போது, இரண்டாம் நிலை வர்த்தகமாகக் கருதப்படுவதால் மேற்சொன்ன வரிச்சலுகை கிடைக்காது. பங்குச் சந்தை வழியாக வாங்கி, விற்கும்போது மூன்று ஆண்டுக்குள் எனில், குறுகிய கால மூலதன ஆதாய வரியாக ஒருவரின் வரி வரம்புக்கு ஏற்பவும் (பழைய வரி முறையில் 5%, 20% மற்றும் 30%), மூன்று ஆண்டுகளுக்கு மேல் எனில், நீண்ட கால ஆதாயத்துக்கு பணவீக்க விகித சரிக்கட்டலுக்குப் பிறகு 20% வரி கட்ட வேண்டும்.”