பழைய வேலையிலிருந்து புதிய வேலைக்கு….
உலக அளவில் எடுக்கப்பட்ட ஆய்வில், பல்வேறு காரணங்களால் வேலை வாய்ப்பை இழந்தவர்கள், புதிய துறைகளில் ஆர்வம் காட்டுவதாக தெரிய வந்துள்ளது . இதுவரை பணியாற்றிய துறையில் வேலைவாய்ப்பு கிடைக்கா விட்டால், புதிய துறை சார்ந்த வேலையை தேர்ந்தெடுப்பது தான் சரியான முடிவாக இருக்கும் . புதிய துறை சார்ந்த வேலையைத் தேர்ந் தெடுக்க முடிவெடுத்தால் , அதற்கான வாய்ப்புகளை எப்படிக் கண்டறிவது ? அதற்கும் வழியிருக்கிறது. ஆனால் , புதிய துறை சார்ந்த வேலை மாற்றங்களுக்கு தயார்படுத்திக் கொண்டு, வேலை வேட்டையில் இறங்க சில வேண்டும்.
ஆய்வு செய்தல் :
நோய்தொற்று காலத்திலும் தப்பித்த அல்லது மறுமலர்ச்சி பெற்ற தொழில்துறைகள் எவை என்பதை ஆராயுங்கள்.புதிய வேலை வாய்ப்புகளை வழங்கும் நிறுவனங்கள் எவை ? அவை அளிக்கும் வேலைவாய்ப்புகள் எவை? அதற்கு தேவைப்படும் அவை அளிக்கும் திறன்கள் எவை ? அந்த வேலைக்கு தகுந்த தொழில் திறன் உங்களிடம் இருக்கிறதா ? என்பதை ஆராயுங்கள் .
வேலைக்கு ஆள் எடுக்கும் நிறுவனங்களின் அணுகுமுறையும் மாறி இருக்கிறது . சமூக பராமரிப்புத் துறை சார்ந்த வேலைகளுக்கு வேலையிழந்த விருந்தோம்பல் துறை சார்ந்த வேலையாட்களை வேலைக்கு அமர்த்தும் போக்கு உள்ளது. அதாவது , அதே துறையில் வேலை செய்தவர்களை காட்டிலும் , வேறு துறையில் வேலை செய்தவர்களை வேலைக்கு எடுத்துக் கொள்கிறார்கள் . வேறுதிறன்களை பயன்படுத்திக் கொள்ளும் போக்கு அதிகரித்து வருகிறது.
கம்யூனிகேசன் வேண்டும் :
பழைய தொடர்புகளோடு இணைந்தி ருங்கள் , இணைய வழியில் நடக்கும் முறைசாரா நேர்காணல்கள் அல்லது மெய்நிகர் வேலைவாய்ப்பு முகாம்களில் கலந்து கொள்ளுங்கள் . இது புதிய சந்திப்புகளுக்கும், புதிய அறிமுகங்களுக்கும் வழிவகுக்கும் .
இந்த தொடர்புகள் அல்லது அறிமுகங்கள் வழியாகத்தான் எந்தெந்த நிறுவனங்களில் புதிய வேலை வாய்ப்புகள் உள்ளன என்பன போன்ற விவரங்கள் தெரியவரும். தொடர்பு வட்டங்களை விரிவுப்படுத்திக் கொள்வது புதிய வாய்ப்புகளைத் தேடுவதற்கு எளிய வாய்ப்பாக அமையும்.
பழைய தொழிலோடு தொடர்புடைய புதிய தொழில் :
பழைய வேலையில் இருந்து புதிய வேலைக்கு செல்லும் போது, சில மனத் தடைகள் இருக்கும். அவற்றை உடைத் தெறிந்து புதியதை ஏற்பது பயனளிக்கும் . ஏற்கெனவே செய்து வந்த வேலைக்குச் சம்பந்தம் இருக்கிறதா ? என பார்க்கலாம் . பழைய வாடிக்கையாளர்கள் அல்லது சம்பந்தப்பட்டவர்களை புதிய வேலையிலும் அணுகும் வாய்ப்புக் கிடைக்கலாம் . பழைய வேலையில் பணி செய்த அதே பகுதியில் புதிய வேலை கிடைப்பது, எளிதில் பணியாற்றுவதற்கு உதவியான இருக்கும் .
திறன் வளர்
புதிய வேலைகளைத் தேடுவதற்கு முன்பு அவற்றுக்குத் தேவையான திறன்கள் உங்களிடம் இருக்கின்றனவா ? என்பதை ஆராயுங்கள். இல்லாவிட்டால் கவலை வேண்டாம். புதிய வேலைக்குத் தேவையான திறன்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.
மத்திய , மாநில அரசுகள் திறன் மேம்பாட்டுக்கு பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளன . அவற்றை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் . பெரும்பாலான திறன் மேம்பாட்டு பயிற்சிகள் இலவசமாகவே கிடைக்கின்றன . பொறியியல் , சுற்றுலா , சமூக பராமரிப்பு , இயற்கை பாதுகாப்பு , உணவு பதனிடுதல் என ஏராளமான தொழில்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகின்றன .
பயோடேட்டாவில் சிறந்த மாற்றம்
புதிய வேலைக்கு விண்ணப்பிக்கும்போது அளிக்கப்படும் தன்விவரக் குறிப்பில் தக்க மாற்றங்களை செய்து கொள்வது அவசியம். தன்விவரக்குறிப்பில் வழக்கமாக குறிப்பிடும் வாசகங்களை பொறிக்காமல், உங்களது திறமைகளை வெளிப்படுத்தும் பல குறிப்புகளைத் தெரிவிக்க வேண்டும்.
தன்விவரக் குறிப்புகளை பழைய வாசகங்கள் இடம் பெற்றிருந்தால் , அவற்றால் ஒரு நன்மையும் விளையாது. மாறாக அவை குப்பைக்கூடைக்குச் சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. நேர்த்தியான அல்லது காலத்திற்கு ஏற்ற தன்விவரக்குறிப்புகளை எழுதுவதற்கு ‘ டாப்சிவி ‘ , ‘ டோட்டல்ஜாப்ஸ் ‘ போன்ற பல இணையதளங்கள் உதவி செய்கின்றன .
தயங்க வேண்டாம் :
தன்விவரக் குறிப்புகளை எழுதும்போது . கடந்த ஓராண்டாக வேலை இல்லை என்றால், அதை குறிப்பிட தயக்கம் வேண்டாம். மேலும் கடந்த ஓராண்டு காலத்தில் புதிதாக பயின்ற பயிற்சிகள் அல்லது பகுதி நேரமாக பணியாற்றிய வேலைகள் அல்லது படித்த வணிக புத்தகங்கள் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
தலைமைத்துவத்தை வெளிப்படுத்துங்கள்
வேலைக்கு ஆள் எடுக்கும் பல விளம்பரங்களில் தலைமைத் துவம் இருப்பவர்களைத் தேடுவதாக குறிப்பிடுகிறது . பயிற்சி அளித்தல் , இணங்கிப் பழகுதல், முடிவெடுத்தல் போன்ற தலைமைத்துவத்தை விரும்புகிறார்கள் . வேலை தேடி வந்திருக்கும் பெரும் கூட்டத்தில் உங்களைத் தனித்துவப்படுத்தி வெளிப்படுத்திக் கொள்ள தலைமைத்துவம் பேருதவியாக இருக்கும் . நிறுவனத்தின் அதிகாரியாக இருந்துதான் தலைமைத்துவத்தை வெளிப்படுத்தி இருக்க வேண்டுமென்பதல்ல . தினசரி வாழ்க்கையில் அனைவரும் தலைமைத்துவத்துவப் பண்புகளைப் பயன்படுத்தி இருப்போம் . அவற்றை உங்களுடைய தன்விவரக் குறிப்பில் குறிப்பிடுங்கள் . இது உங்களின் மதிப்பை பன்மடங்கு உயர்த்தும்.
பயிற்றுவித்துக்கொள்ளுங்கள்
புதிய வேலைக்கு உங்களை தகவமைத்துக் கொள்வதற்கு முறையான பயிற்சி அவசியமாகும். அதற்காக உங்களை பயிற்றுவித்துக் கொள்ளுங்கள். தொழில்முறை வேலை பயிற்றுநர்கள் பலர் இருக்கிறார்கள். என்றாலும் இந்தசேவைகளை இலவசமாக அளிக்கும் நிறுவனங்களும் உள்ளன. இதுபோன்ற நிறுவனங்கள் தன்விவரக்குறிப்புகளை ஆராய்ந்து தக்க மாற்றங்களைத் தெரிவிக்கும்.