குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிலுக்கான முதலீட்டு மானியம்
தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள அரசாணையின்படி குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான மானியங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி குறு உற்பத்தி தொழில்களுக்கான முதலீட்டு மானியம் :
தகுதியான இயந்திர தளவாடங்களின் மதிப்பில் 25 சதவீதம் அதிகபட்சமாக ரூ . 25 இலட்சம் வரை மானியமாக வழங்கப்படும்.
தகுதியுள்ள நிறுவனங்கள் : தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் புதியதாக தொடங்கப்படும் குறு உற்பத்தி நிறுவனங்கள். தொழில் விரிவாக்கம் அல்லது மாற்று பொருள் உற்பத்தி மேற்கொள்ளும் தற்போது இயங்கி வரும் குறு உற்பத்தி நிறுவனங்கள். வணிக ரீதியிலான உற்பத்தி துவங்கிய நாளிலிருந்து ஒரு வருட காலத்திற்குள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி தொழில்களுக்கான முதலீட்டு மானியம்
தகுதியான இயந்திர தளவாடங்களின் மதிப்பில் 25 சதவீதம் அதிகபட்சமாக ரூ.150 இலட்சம் வரை மூன்று தவணைகளாக மூன்று ஆண்டுகளில் மானியமாக வழங்கப்படும்.
தகுதியுள்ள நிறுவனங்கள் : ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் தொடங்கப்படும் அனைத்து புதிய வேளாண்சார் மற்றும் உணவு பதப்படுத்தும் சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி தொழில் நிறுவனங்கள்.
தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய வட்டாரங்கள் மற்றும் தொழிற் பேட்டைகளில் தொடங்கப்படும் அனைத்து புதிய சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி தொழில் நிறுவனங்கள். தொழில் விரிவாக்கம் அல்லது மாற்றுப் பொருள் உற்பத்தி மேற்கொள்ளும் தற்போது இயங்கி வரும் மேற்கண்ட வகையை சார்ந்த சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி தொழில் நிறுவனங்கள். வணிக ரீதியிலான உற்பத்தி துவங்கிய நாளிலிருந்து ஒரு வருட காலத்திற்குள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
குறு உற்பத்தி தொழில்களுக்கன கூடுதல் முதலீட்டு மானியம்
தகுதியான இயந்திர தளவாடங்களின் மதிப்பில் 10 சதவீதம் அதிகபட்சமாக ரூ.5 இலட்சம் வரை ஐந்து ஆண்டுகளில் மானியமாக வழங்கப்படும்.
தகுதியுள்ள நிறுவனங்கள் : தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் புதியதாக தொடங்கப்படும் குறு உற்பத்தி நிறுவனங்கள்.
தொழில் விரிவாக்கம் அல்லது மாற்று பொருள் உற்பத்தி மேற்கொள்ளும் தற்போது இயங்கி வரும் குறு உற்பத்தி நிறுவனங்கள். வணிக ரீதியிலான உற்பத்தி துவங்கிய நாளிலிருந்து ஒரு வருட காலத்திற்குள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
சிறப்பு வகை தொழில் முனைவோருக்கான கூடுதல் முதலீட்டு மானியம்மகளிர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கையினர் புதிய உற்பத்தி தொழில் நிறுவனங்களை தொடங்கும்போது தகுதியான இயந்திர தளவாடங்களின் மதிப்பில் 5 சதவீதம் அதிகபட்சாக ரூ.5 இலட்சம் கூடுதல் முதலீட்டு மானியமாக வழங்கப்படும்.
தகுதியுள்ள நிறுவனங்கள் : தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் புதியதாக தொடங்கப்படும் குறு உற்பத்தி நிறுவனங்கள்.
ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் தொடங்கப்படும் அனைத்து புதிய வேளாண்சார் மற்றும் உணவு பதப்படுத்தும் சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி தொழில் நிறுவனங்கள். தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய வட்டாரங்கள் மற்றும் தொழிற் பேட்டைகளில் தொடங்கப்படும் அனைத்து புதிய சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி தொழில் நிறுவனங்கள்.