சொத்து குறித்த பொதுஅறிவிப்பு விளம்பரம் அவசியமா?
அனைத்து சொத்துகளுக்கும் பத்திரிகை விளம்பரம் அவசியமில்லை. சொத்தில் வில்லங்கமோ, மூலப்பத்திரம் உட்பட முக்கிய ஆவணங்கள் காணாமல் போனாலோ பத்திரிகையில் விளம்பரம் கொடுக்க வேண்டும்.
பத்திரிகையில் விளம்பரம் தருவதற்கு முன்னர் காவல்நிலையத்தில் பத்திரம் காணவில்லை என புகார் கொடுத்து ரசீது பெற வேண்டும். அவர்களால் பத்திரம் கண்டுபிடிக்க முடியவில்லை எனில் வாங்கும் சொத்து குறித்து பொது அறிவிப்பு விளம்பரம் வெளியிட வேண்டும். இரு வாரங்கள் கழித்து தெரிந்த வக்கீல் மூலம் சர்டிபிகேட் பெற்றுக்கொண்ட பின்னரே சொத்தை வாங்க வேண்டும்.