ஆச்சி மசாலாவை வாங்குகிறதா ரிலையன்ஸ்?
ரிலையன்ஸ் ரீட்டெயில் நிறுவனம் திவிசிநி எனப்படும் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சந்தையில் அதிகம் விற்கப்படும் பொருட்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. ரிலையன்ஸ் நிறுவனத்தில் ரீட்டெய்ல் பிரிவை முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி கவனித்து வருகிறார்.
பொதுமக்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் தங்கள் ரீட்டெயில் நிறுவனத்தில் கிடைக்க வேண்டும் என்ற நோக்குடன் பணியாற்றி வருவதாக ஈஷா தெரிவித்துள்ளார். இந்நிலையில் மசாலா பொருட்கள் விற்பனையில் ரிலையன்ஸ் ரீட்டெயில் நிறுவனம் தனது பார்வையை திருப்பியுள்ளது. இது வரை இந்தியாவில் விஞிபி மற்றும் தமிழகத்தில் ஆச்சி மசாலா உள்ளிட்ட நிறுவனங்கள் பிரபலமாக உள்ளன. இதன் பெரும் பங்கை கைப்பற்ற ரிலையன்ஸ் குழுமம் திட்டமிட்டுள்ளது.
கிட்டத்தட்ட அனைத்து விதமான பொருட்களையும் விற்கும் ரிலையன்ஸ் ரீட்டெயில் நிறுவனம், தமிழகத்தில் மேலும் சில நிறுவனங்களை வாங்க விலை பேசி வருவதாகவும், பேரம் படியாததால் இப்போது ரிலையன்ஸ் நிறுவனம் அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆச்சி நிறுவனத்துக்கு தமிழகத்தில் மட்டும் 3 ஆயிரம் விநியோகஸ்தர்கள் உள்ளனர் என்பதும், எம்டிஎச் நிறுவனம் ஒரு நாளைக்கு 30 டன் மசாலா பொருட்களை உற்பத்தி செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.