முதலீடுகளில் ரிஸ்க் சரிதானா…
எதிர்காலத்தை முன்னிட்டு முதலீடு செய்பவர்கள் தங்களுக்கான முதலீட்டு திட்டங்களை ஆராய வேண்டும். அவர்களின் ரிஸ்க் எடுக்கும் தன்மைக்கேற்ற திட்டங்களை நிதிஆலோசகர்கள் ஆலோசனை வழங்குவார்கள்.
அதாவது குறைந்த ரிஸ்க் & குறைந்த வருமானம், அதிக ரிஸ்க்&அதிக வருமானம் என்ற கலவையிலும் முதலீடு செய்ய சொல்வார்கள். அவர்களின் தேவையான நிதிநிலையை அடைய ரிஸ்க் எடுக்கும் காலத்தையும் நிர்ணயித்து, அவ்வப்போது முதலீட்டில் செய்ய வேண்டிய மாற்றங்களையும் ஆராய வேண்டும். ஒருவர் அவரின் வயதிற்கேற்ப ரிஸ்க் எடுப்பது நல்லது. அதாவது வயது ஆக ஆக ஈக்விட்டி சார்ந்த முதலீட்டை தவிர்த்து கடன் சார்ந்த முதலீடுகளில் முதலீட்டை அதிகரிப்பது நல்லது.