எரியிற வீட்ல புடுங்குறதே லாபம்….
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை காரணமாக்கி, அமெரிக்காவின் நிர்பதத்துக்கு அடிபணிந்து, ஐரோப்பிய ஒன்றியம் சில அவசர முடிவுகளை எடுத்துள்ளது. இதன்படி, ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணையை நிறுத்திவிட்டு, உடனடியாக ஓபெக, அமெரிக்காவிடம் கச்சா எண்ணை வாங்குவதற்கு முடிவு செய்துள்ளன.
இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை உயரத் தொடங்கியது. உற்பத்தியை ஓபெக் நாடுகள் உயர்த்தவில்லை . ஆனால், ஐரோப்பிய ஒன்றியம் போட்டி போட்டு கச்சா எண்ணை வாங்குவதால், ஓபெக் நாடுகள் விலையை உயர்த்தி, லாபம் பார்க்கின்றன. கூடவே அமெரிக்காவும்.
ஆனால் இந்த விலை உயர்வால், ஐரோப்பிய யூனியன் மற்றும் கச்சா எண்ணை உற்பத்தி நாடுகள் தவிர, உலகின் பெரும்பாலான வளரும் நாடுகளும், ஆப்பிரிக்கா கண்டத்தின் ஏழை நாடுகளும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் ஒவ்வொரு நாடும் தங்களது அன்னிய செலாவணியின் பெரும் பகுதியை செலவிட வேண்டியுள்ளதால், பொருளாதார நெருக்கடி சிக்கலில், பல நாடுகள் சிக்கத் தொடங்கியுள்ளன என்பது வருத்தமான விஷயம்.