வீடு தேடி வரும் வாழ்நாள் சான்று
தமிழக அரசு மற்றும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியுடன் ஓய்வதியர்களின் இருப்பிடத்திற்கே சென்று வாழ்நாள் சான்றிதழ் வழங்கும் விதமாக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தம் மூலம், ஜூலை முதல் செப்டம்பர் 2022 வரையிலான மாதங்களில் நடைபெறும் வருடாந்திர நேர்காணலில் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர்களின் வயதை கருத்தில் – கொண்டும், நேரில் வருவதில் ஏற்படும் இடர்பாடுகளை தவிர்க்கும் பொருட்டும் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கியின் மூலம் ஓய்வூதியர்களின் இருப்பிடத்திற்கே சென்று ஜீவன் பிரமான் இணை யத்தின் வழியாக மின் னணு வாழ் நாள் சான்றிதழைப் பெறுவதற்கான சேவையை உள்ளடக்கிய ஐந்து முறைகளில் வருடாத்திர நேர்காணலை நடைமுறைப்படுத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.