பத்திர பதிவுத்துறை : புதிய அறிவிப்பு
தினசரி சார்பதிவாளர் அலுவலகங்களில் காலை 10 மணி, 11மணி, பகல் 12 மணி, 2 மணி ஆகிய நேரங் களில் தலா 20 டோக்கனும், 1 மணி மற்றும் 3 மணி அளவில் தலா 10 டோக்கன் என 100 டோக்கன் வரையில் பதிய அனுமதிக்கப்பட்டு வருகிறது. இனி தட்கல் முறையில் 20 டோக்கன் பதியும் நேரத்தில் தலா 2 டோக்கனும், 10 டோக்கன் பதியும் நேரத்தில் 1 டோக்கன் என தினசரி 10 டோக்கன்கள் பதிவு செய்ய அனுமதிக்கப்படும்.
பதிவு செய்ய ஒதுக்கப்பட்ட நேரத்திலும், முன்பதிவு செய்யும் நாளில் மறு திட்டமிடப்பட்ட நேரத்திலும் பொதுமக்கள் வரவில்லை என்றால், டோக்கன் செல்லாது மற்றும் கட்டணம் திரும்ப கிடைக்காது. வழக்க மான ஸ்லாட்டுகளுடன் தட்கல் இடங்களும் முன்பதிவு செய்யக் கிடைக்கும். வழக்கமான டோக்கன் களுடன் தட்கல் ஸ்லாட் முன்பதிவு 2 மாதங்களுக்கு முன்பே திறக்கப்படும். தட்கல் டோக்கன்களை தேர்வு செய்யும் பதிவுதாரர்களிடமிருந்து ஒரு டோக்கனுக்கு ரூ.5 ஆயிரம் வசூலிக்கப்படும்.