பட்டைய கிளப்பும் திருச்சி பட்ஜெட் நச்சென 10 பாயின்ட்…
திருச்சி மாநகராட்சியில் தாக்கல் செய்ப்பட்ட 2022-23 ஆண்டுக்கான பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய திட்டங்கள் செயல்படுத்த அறிவிக்கப்பட்டுள்ளது.
1) ரூ.9 கோடி செலவில், 19 நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களில் 38 மையங்கள் கட்டப்படும்.
2) ரூ.44 லட்சத்தில் உறையூர், கீழரண்சாலை மாநகராட்சி மருத்தவமனைகளில் புதிய சுகாதார ஆய்வங்கள் அமைக்கப்படும்.
3) ரூ.53 கோடியில் புதிய குடிநீர் வீட்டு இணைப்புகள் வழங்கப்படவுள்ளது.
4) ரூ-.200 கோடியில் பஞ்சப்பூரில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும்.
5) ரூ.210 கோடியில் மாநகராட்சியில் புதிய பாதாள சாக்கடை திட்டம்
6) ரூ.17 கோடியில் சாலைகளை சீரமைத்தல்
7) ரூ.44 கோடியில் திருச்சி மாரீஸ் சாலையை அகலப்படுத்தல.
8) ஒவ்வொரு வார்டிலும் சாலைகளை சீரமைக்க வார்டுக்கு ரூ.50 லட்சம் வீதம் செலவிடப்படும்.
8) ரூ.40 கோடி செலவில் திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்துக்கு புதிய கட்டிடம்
9) திருச்சி மேலப்புதூரில் நடைபாதை மேம்பாலம்
10)மாநகரில் தெருவிளக்குகள் சூரியஒளி மின்சாரத்தில் செயல்பட 5 ஆயிரம் தெருவிளக்குகள் மாற்றி யமைக்கப்படும்..