திருச்சியின் வாழ்வியலையும் இயற்கையின் உன்னதத்தையும் மேம்படுத்த
TRY பவுண்டேஷன் அலுவலக திறப்பு விழா
திருச்சியின் வாழ்வியலையும் இயற்கையின் உன்னதத்தையும் மேம்படுத்த பல சீரிய முயற்சியில் ஈடுபட்டு வரும் TRY பவுண்டேஷன் அலுவலக திறப்பு விழா தில்லைநகரில் நடைபெற்றது.
பசுமை மிக்க நிகழ்வோடு தொடங்க வேண்டும் என்பதற்காக தீரன் நகரில் 25 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு மியாவாக்கி குறுங்காடு அமைக்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு தொடங்கி வைத்தார். இத்திட்டத்திற்கான பங்களிப்பை SEED ( சீடு ) அமைப்பு வழங்கியது.
அதனை தொடர்ந்து மாநகராட்சி அலுவலகத்தில் திருச்சியின் தூய்மை மற்றும் பசுமையை மேம்படுத்த நான் உறுதியளிக்கிறேன் என்கிற வாசகங்கள் அடங்கிய நடமாடும் வாகனத்தை திருச்சிராப்பள்ளியில் மேயர் அன்பழகன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.. பொதுமக்கள் தூய்மையை பசுமையை வலியுறுத்தி தாய்மொழியில் கையெழுத்திடும் இயக்கத்தை முன்னெடுத்துள்ளனர்.
திருச்சி NSB சாலையின் வரலாற்றையும் தொன்மையையும் கூறும் குறும்படத்தை V Dart solution நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வெளியிட்டார் மியாவாக்கி முறையில் குறுங்காடுகள் அமைத்தல், நீர்நிலை வழித்தடங்களை சீர்படுத்துதல் என மூன்று பிரதான நோக்கங்களைக் கொண்ட TRY பவுண்டேஷன் அலுவலகத்தை மங்கள் & மங்கள் நிர்வாக இயக்குனர் திரு மூக்கப்பிள்ளை துவங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பத்மஸ்ரீ விருது பெற்ற திரு தாமோதரன், லால்குடி வருவாய் கோட்டாட்சியர் திரு வைத்தியநாதன், மற்றும் திருச்சி நகர பொறியாளர் திருமதி அமுதவல்லி ஆகியோரின் அர்ப்பணிப்பு உணர்வை பாராட்டி அவர்கள் மூவரும் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக வணிகர் சங்கப் பேரவையின் பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு மற்றும் திருச்சியின் பிரதானமான தொழில் அதிபர்
கள் அரசியல் பிரமுகர்கள், கல்வியாளர்கள், தொண்டு நிறுவனங்கள் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்