சாலை அமைப்பதால் உருவாகும் வேலை வாய்ப்பு!
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சாலைகளுக்கு முக்கிய பங்குண்டு. இந்தியா 63 லட்சம் கி.மீ. சாலைகளுடன் உலகின் இரண்டாவது மிகப் பெரிய சாலை கட்டமைப்பை கொண்டது. பயணிகள் போக்குவரத்தில் 90 சதவீதமும் சரக்கு போக்குவரத்தில் 70 சதவீதமும் சாலைகளில் நடைபெறுகின்றன.
ரூ.111 லட்சம் கோடியை தேசிய உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு இந்த ஆண்டு அரசு முதலீடு செய்து வருவதால், ஒரு நாளைக்கு 40 கி.மீ. என்று 60,000 கி.மீ. உலகத்தரம் வாய்ந்த தேசிய நெடுஞ்சாலைகளை கட்டமைப்பது தனது லட்சியம். இதனால் வேலைவாய்ப்புகள் உருவாகும்.
இந்தியாவில் சாலைகள் வளர்ச்சி குறித்த 16-வது வருடாந்திர மாநாட்டில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியது.