மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடனுதவி..! பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவிப்பு!
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 1 லட்சம் முதல் 10 லட்சம் வரையில் நிதியுதவி அளிக்கப்படும் என பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவித்துள்ளது. நிதியுதவியினை பெற பிஎன்பி சில நிபந்தனைகளை அறிவித்துள்ளது.சுய உதவி குழுக்கள் கிராமப்புற மற்றும் பழங்குடி பகுதியினை சேர்ந்ததாக இருக்க வேண்டும். குழுவில் குறைந்தபட்சம் 10-&15 பேர் உறுப்பினராக இருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகள் குறைந்தபட்சம் ஐந்து பேராவது இருக்க வேண்டும். ரூ.10,000 முதல் ரூ.15,000 சுற்று நிதியும், ரூ.50,000 முதல் ரூ.10 லட்சம் வரையிலும் கடன் உதவியும் வழங்கப்படும். இந்த கடனுக்கு ஆண்டுக்கு 7% வரை வட்டி வசூலிக்கப்படும்.
பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவித்துள்ள மற்றொரு நிதியுதவி திட்டம் : தீன்தயாள் அந்தோயோதயா திட்டம். இந்த திட்டத்தின் அடிப்படையில் வேலை வாய்ப்புக்காக ஒரு தனிப்பட்ட மைக்ரோ நிறுவனத்தை அமைக்க விரும்பும் நகர ஏழை தனி நபர் பயனாளி மற்றும் சுய உதவிக் குழு அல்லது DAY-NULM கீழ் அமைக்கப்பட்ட குழு உறுப்பினர்கள் அல்லது சுய வேலைக்காக நகர்புற ஏழைகளின் குழு இந்த திட்டத்திற்கு தகுதியுடையவர்கள். இந்த குழு நிறுவனத்தில் குறைந்தபட்சம் 5 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். குறிப்பாக நகர்புற ஏழைக் குடும்பங்களை சேர்ந்த குறைந்தபட்சம் 70% உறுப்பினர்கள் இருக்க வேண்டும். இதில் தனி நபர் நிறுவனத்திற்கு வழங்கப்படும் கடன் தொகை ரூ.2 லட்சம் வரையிலும், இதே குழு நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் வரையிலும் கடன் வழங்கப்படும். இதில் ரூ.50,000 வரையிலான கடன் மற்றும் அதிகளவிலான கடன்களுக்கு மார்ஜின் சலுகை உண்டு. கடனுக்கான வட்டி விகிதம், வங்கிகள் கடன் வழங்கும் போது அப்போதைய விகித்திற்கு ஏற்ப பரிந்துரைக்கும்.