Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

கட்டுமான பொருட்கள் விற்பனையில் மாபெரும் சாம்ராஜ்யம் லால்குடி பொன்னு குருப்ஸ்

கட்டுமான பொருட்கள் விற்பனையில் மாபெரும் சாம்ராஜ்யம் லால்குடி பொன்னு குருப்ஸ்

லால்குடியில் 1992ம்ஆண்டு அப்துல் முத்தலீப் என்பவரால் ஒரு சிறிய மளிகை கடை தொடங்கப்பட்டது. நேர்மையான வியபாரம் மற்றும் இனிய அணுகுமுறையால் வாடிக்கையாளர்கள் மற்றும் நட்பு வட்டம் பெருகியது. தொடர்ந்து 2000ல் பொன்னு பிளைவுட்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது.

கட்டிட பொருட்கள் அனைத்தும் ஒரே இடத்தில் விற்பனை செய்யப்பட்டதால் நாளடைவில் வாடிக்கையாளர்கள் பன்மடங்கு பெருகினர்.2010ம்ஆண்டு டைல்ஸ், ஸ்டீல், சிமெண்ட் பொருட்கள் விற்பனை செய்ய என தனிப்பிரிவு தொடங்கப்பட்டது. இங்கு அனைத்து முன்னணி நிறுவனங்களின் டைல்ஸ், கடப்பா கல்,மற்றும் அனைத்து விதமான சிமெண்ட் வகைகள் , சிமெண்ட் தயாரிப்பு பொருட்களும் விற்கப்படுகிறது.


தொடர்ந்து 2013ல் எலக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பிங் பொருட்கள் விற்பனை செய்ய என தனி விற்பனையகம் தொடங்கப்பட்டது. இதில் அனைத்து முன்னணி நிறுவனங்களின் தயாரிப்புகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஏசியன் பெயிண்ட் , சி.ஆர்.ஐ பம்புகள் (மோட்டார்கள் )பல்வேறு முன்னணி சிமெண்ட் நிறுவனங்களுடன் டீலர்ஷிப் வைத்துள்ளனர்.

வாடிக்கையாளர்களை மதிக்கும் எங்கள் குணமே எங்கள் வளர்ச்சிக்கு மூலதனம் என நிர்வாக இயக்குனர் ஷாஜகான் தெரிவித்தார். தொடர்வளர்ச்சி மற்றும் வாடிக்கையாளர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி தற்போது 2022 ல் பொன்னு எலக்ட்ரிக்கல் கார்பரேசன் என்ற புதிய விரிவுபடுத்தப்பட்ட விற்பனையகம் தொடங்கம்பட்டுள்ளது.

பொன்னு பிளைவுட்ஸ் & ஹார்டுவேர்ஸ் , பொன்னு டைல்ஸ் & சிமெண்ட் ஒர்க்ஸ் , பொன்னு எலக்ட்ரிக்கல் & பிளம்பிங் , பொன்னு எலக்ட்ரிக்கல் கார்பரேசன் ஆகிய அனைத்து நிறுவனங்களுமே லால்குடியில் பூவாளூர் சாலையிலேயே அமைந்துள்ளது இந்நிறுனத்தின் வளர்ச்சிக்கு பெரும்பங்காக அமைந்துள்ளது.

பொன்னு குரூப்ஸ் நிறுவனங்களை சகோதரர்கள் ஷாஜகான் , ஜாகிர்உசேன் , இதயத்துல்லா ஆகியோர் நிர்வாகத்திறமையால் லால்குடியில் கட்டுமான பொருட்கள் விற்பனையில் மாபெரும் சாம்ராஜ்யம் நடத்தி வருகின்றனர் என்றால் அது மிகையாகாது.

Leave A Reply

Your email address will not be published.