சீனாவைச் சேர்ந்த லெனோவா புதிய அம்சங்களுடன் யோகா டேப் 13 என்ற டேப்லட் கணினியை அறிமுகம் செய்ய உள்ளது..
இதன் திரை மடிக்கணினிகளுக்கு கூடுதல்திரையாகவும், தனித்து பயன்படுத்தும்போது 180 டிகிரி கோணத்தில் திரையை திருப்பும் வகையிலும், துருப்பிடிக்காத எஃகு கம்பியும் இதனுடன் வழங்கப்பட உள்ளது. இதனால் விடியோக்களின் போது சுவற்றில்மாட்டியபடி இதனைப் பயன்படுத்தலாம்.
13 அங்குலத்தில் ஆண்டிராய்டு இயங்குதளத்தில் யோகா டேப் 11, டேப் M7, டேப் M8 அறிமுகம் செய்யப்படவுள்ளன. இவை கோடைக்கு பிறகு இந்திய சந்தைக்கு வரும்
யோகா டேப் 13 டேப்லட் கணினியில் குறிப்புகளை எடுக்கும் வகையில், எழுதுகோல் மற்றும் 8MP கேமரா, விடியோ கால் செய்கையில் வெளிப்புற சத்தங்களை குறைக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
12 மணி நேரத்திற்கு பேட்டரி திறனுடன், 1080 திரைத் துல்லியமும், , விடியோக்கள், புத்தகங்கள், இசை, விளையாட்டு போன்ற பல்வகை பயன்பாட்டுக்கு ஏற்ப கூகுள் எண்டர்டெயின்மெண்ட் அம்சமும் கொடுக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில்தான் திங்க் பேட் X1 Fold என்ற மடிக்கக் கூடிய டேப்லட் கணினியை லெனோவா அறிமுகம் செய்தது.