தில்லியைச் சேர்ந்த அதிதீ சிங் என்ற 20 வயது இளம் பெண் இணைய பாதுகாப்பு ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இதற்கு முன்பு மேப் மை இந்தியா நிறுவனத்தில் இணையப் பிழைகளைக் கண்டறிந்த அவருக்கு அந்நிறுவனம் பணியாணை வழங்கியது.
தற்போது அவர் மைக்ரோசாஃப் நிறுவனத்தின் ஆர்.இ.சி. எனப்படும் தொலைக் குறியீடு செயல்படுத்துதல் பிரிவில் உள்ள பிழையை கண்டறிந்து அந்நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
இதனால், அவரை பாராட்டிய அந்நிறுவனம் 30 ஆயிரம் டாலர் தொகையை பரிசாக தந்தது. (இந்திய மதிப்பில் அது ரூ.22 லட்சமாகும்.)
இதற்கு முன்பு இவர் முகநூலில் பிழையைக் கண்டறிந்து ரூ.5.5 லட்சம் பரிசாக பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.