ஓட்டுனர் இருக்கைக்கு மட்டுமே, ‘ஏர்பேக்’ கட்டாயமாக இருந்த நிலையில், முன்னால் இருக்கும் மற்றொருஇருக்கைக்கும் ஏர்பேக் அமைக்க வேண்டும் என்று சாலை போக்குவரத்து அமைச்சகம் கட்டாயமாக்கி உள்ளது.
புதிய மாடல் வாகனங்களுக்கு, ஏப்ரல் 1ம் தேதிக்குள்ளும், முன்பு உள்ள மாடல்களுக்கு ஆகஸ்ட் 31ம் தேதிக்குள்ளாகவும், ‘ஏர்பேக்’ வசதியை நிறுவ வேண்டும் என, கடந்த மார்ச் 6ம் தேதி சாலை போக்கு வரத்து அமைச்சகம் உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த காலக்கெடுவை டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டித்து உள்ளது அமைச்சகம். கொரோனா பாதிப்பின் காரணமாக இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த கால நீட்டிப்பு செய்துள்ளதாக உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.