Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

மோசடி நிறுவனங்கள் கற்றுத் தரும் பாடங்கள்!

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

மோசடி நிறுவனங்கள் கற்றுத் தரும் பாடங்கள்!

இன்றைக்கு ஊருக்கு ஊர் மோசடி நிதி நிறுவனங்கள் பொதுமக்கள் பணத்தை சுருட்டிக்கொண்டு தான் இருக்கின்றன.மாதம் தோறும் 8%, 16%, 24% அதற்கு மேலும்கூட வருமானம் தருவதாகச் சொல்லி, மக்களிடம் இருந்து பல ஆயிரம் கோடி ரூபாயை வசூல் செய்த பிறகு, ஒரு நல்ல நாளில் மொத்தப் பணத்தை யும் சுருட்டிக்கொண்டு ஓடிவிடுவது இது மாதிரியான நிறுவனங்களின் தொழிலாக இருக்கிறது. ‘அட, இவ்வளவு லாபம் கிடைக்கிறதே’ என்று நினைத்து இந்த நிறுவனங்களில் பணம் கட்டுகிறார்கள் மக்கள்.

இறுதியில் முதலுக்கே மோசம் போய் புலம்பித் தீர்க் கிறார்கள். இது மாதிரியான மோசடி நிறுவனங்களில் இனியாவது சிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும், இந்த மோசடி நிறுவனங்கள் நமக்குக் கற்றுத் தரும் பாடங்கள் என்னென்ன என்பது குறித்துப் பார்ப்போம்.

அதிகமான லாபம் தருவோம் எனில் நம்பாதீர்கள்!
எந்த முதலீடாக இருந்தா லும் ஒரு குறிப்பிட்ட அளவுக்குதான் வருமானம் கிடைக்கும். மூலதனத்துக்குப் பாதுகாப்புத் தரும் வங்கி எஃப்.டி போன்ற திட்டங் களில் ஆண்டுக்கு 6% வருமானம் கிடைக்கும். அதாவது, ரூ.1 லட்சத்தை வங்கி எஃப்.டி-யில் முதலீடு செய்தால், ஓராண்டு கழித்து ரூ.6,000 வருமானம் கிடைக் கும். இந்த அளவு வருமானம் தான் அரசால் அங்கீகரிக்கப் பட்ட நிறுவனங்களால் தர முடியும். இதற்கு மேல் வருமானம் கிடைக்கும் என்று சொல்லும் முதலீடுகளில் என்ன ரிஸ்க் இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும்.

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

உதாரணமாக, பங்குச் சந்தை மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் மூலம் ஆண்டு தோறும் 8% – 10% வருமானம் கிடைக்கலாம். ஆனால், அந்த வருமானம் ஒவ்வோர் ஆண்டும் நிச்சயமாகக் கிடைக்கும் என்பதற்கு உத்தர வாதம் இல்லை. சில ஆண்டுகளில் 10% இழப்புகூட ஏற்பட வாய்ப்புண்டு. எந்த நிறுவன மாக இருந்தாலும் ஆண்டுக்கு 12 சதவிகிதத்துக்கு மேல் நிச்சயம் லாபம் தருவோம் என சொல்லக் கூடாது என்று நிபந்தனை விதித்திருக்கிறது ரிசர்வ் வங்கி. அப்படியிருக்க, மாதம்தோறும் 6% முதல் 10% அல்லது அதற்கும் மேலும் வருமானம் தருவோம் என்று சொல்வது விதிமீறலே.

அது மட்டுமல்ல, நியாயமான முறையில் அந்த அளவுக்கு வருமானம் தருவதும் அத்தனை எளிதல்ல. அப்படி தருவோம் என்று ஏதாவது ஒரு நிறுவனம் சொன்னால், அது நிச்சயம் மோசடி நிறுவனம் என்பதைப் புரிந்து கொண்டு, விலகி நிற்பதுதான் நம் பணத்துக்குப் பாதுகாப்பு.

வேலை பெறுவது எளிது ! தலைசிறந்த வேலைவாய்ப்பு இணைதளம்

பத்திரம் எழுதித் தந்தால் நம்பாதீர்கள்!
மோசடி நிறுவனங்கள் மக்களிடம் வாங்கும் பணத்துக்கு சான்றாக பத்திரம் எழுதித் தந்தால், அதை நம்பாதீர்கள். மக்கள் தரும் பணத்துக்கு 20 ரூபாய் பத்திரத்தில் எழுதித் தந்தால், அது உத்தரவாதமான ஆவணமாக மக்கள் நினைக்கிறார்கள். எந்தப் பத்திரமாக இருந்தாலும், அதைப் பத்திரப் பதிவு அலுவலகத்தில் முறைப்படி பதிவு செய்ய வேண்டும். அதற்கு எத்தனை லட்சம் பணம் கட்டுகிறீர்களோ, அதற்கேற்ப பத்திரம் வாங்க வேண்டும். இதை எல்லாம் செய்யாமல் வெறும் 20 ரூபாய் பத்திரத்தில் எழுதித் தரும் வாசகங்களை வைத்து நம் பணம் நிச்சயமாகத் திரும்பக் கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

கடன் வாங்கி பணம் கட்ட வேண்டாம்!
மோசடித் திட்டங்களில் சொந்தமாக இருக்கும் பணத்தைக் கட்டுவதே தவறு என்கிறபோது, கடன் வாங்கிக் கட்டுவது அதைவிடப் பெரிய தவறு. அதிக லாபம் கிடைப்பதைப் பார்க்கும் சிலர், நாம் கட்டிய பணத்தை நமக்கே திரும்பத் தருகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளாமல், கடன் வாங்கி இந்த நிறுவனங்களில் கட்டுகிறார்கள். சிலர், கிரெடிட் கார்டில் கடன் வாங்கிக் கட்டு கிறார்கள். சிலர், வீட்டை அடமானம் வைத்து கட்டுகிறார்கள். இப்படிக் கட்டும் பணம் மோசடிக்கு உள்ளாகும் நிலையில், வாங்கிய கடனை வட்டியுடன் திரும்பக் கட்ட வேண்டியிருக்கும் என்பதை மறக்காதீர்கள்!

நியாயமான வருமானம் தரும் திட்டங்கள் எத்தனையோ இருக்கும்போது, அதிக லாபத் துக்குப் பேராசைப்பட்டால், பெரும் நஷ்டம் அடைய வேண்டியிருக்கும் என்பதை மட்டும் என்றும் மறக்காதீர்கள்! மாதம்தோறும் 6% முதல் 10% அல்லது அதற்கும் மேல் வருமானம் தருவதாகச் சொன்னால், அது நிச்சயம் மோசடி நிறுவனமே!

என்ன தொழில் அல்லது எதில் முதலீடு செய்கிறது என்று பாருங்கள்!
எந்தத் தொழில்/முதலீடாக இருந்தாலும், குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே லாபம் கிடைக்கும். அந்த லாபமும் ஒவ்வோர் ஆண்டும் கிடைக்கும் என்பதற்கு எந்த நிச்சயமும் இல்லை. எனவே, அதிகமான லாபம் தருவோம் என்று சொல்லும் நிறுவனங்களில் பணம் கட்டும்முன், அந்த நிறுவனம் என்ன தொழில் செய்கிறது அல்லது நம் பணத்தை எதில் முதலீடு செய்து, இவ்வளவு தருவதாகச் சொல்கிறது என்று கேளுங்கள்.

இந்தக் கேள்விக்கு மோசடி நிறுவனங்கள் பல பதில்களைத் தயாராக வைத்திருக்கும். ஷேர் மார்க்கெட் டிரேடிங், கமாடிட்டி டிரேடிங், ஃபாரெக்ஸ் டிரேடிங், கிரிப்டோகரன்சி டிரேடிங், ஏற்றுமதி/இறக்குமதி எனப் பல பொய் களைச் சொல்லும். இவற்றின் மூலம் மாதம்தோறும்/ ஆண்டுதோறும் நிச்சயமாக இவ்வளவு லாபம் கிடைக்கும் என்று உறுதியாகச் சொல்லவே முடியாது. உண்மை இப்படி இருக்க, அவர்கள் அதிகம் லாபம் தருவதாகச் சொன்னால், அது பொய் என்பதைப் புரிந்துகொண்டு விலகி நின்றால், பணத்தை இழக்க வேண்டியிருக்காது.

அரசுப் பதிவுபெற்ற நிறுவனமா என்று பாருங்கள்!
நம் நாட்டில் செயல்படும் எந்த நிறுவனமாக இருந்தாலும் அரசு அனுமதி பெற வேண்டும். ஒரு சிறு டீக்கடையை நடத்தினாலும், அதற்கான அனுமதியை வாங்கியே ஆக வேண்டும் என்கிறபோது, கொள்ளை லாபம் தருவோம் என்று சொல்லும் நிதி நிறுவனங்கள் எந்தெந்த அரசு அமைப்புகளிடம் அனுமதி வாங்கி இருக்கின்றன எனக் கட்டாயம் கவனிக்க வேண்டும். பலரிடமும் பணம் வாங்கி, ஏதோ ஒன்றில் முதலீடு செய்யும் (collective investment scheme) நிறுவனங்கள் பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரிய மான ‘செபி’யிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஆனால், மோசடி நிறுவனங்கள் வர்த்தக விவகாரத் துறையில் (Ministry of Corporate Affairs) பதிவு செய்து கொண்டதைக் காட்டி, அனுமதிபெற்றதாகச் சொல்லி ஏமாற்றுகின்றன.

ஒரு நிறுவனத்தைத் தொடங்கி, அதை வர்த்தக விவகாரத்துறையில் பதிவு செய்வது அடிப்படையான விஷயம். அதனால் அந்த நிறுவனம் ஏமாற்றாது என்பதற்கு நிச்சயம் இல்லை. சில நிறுவனங்கள் ஜி.எஸ்.டி எண்ணைக் காட்டி ஏமாற்றுகின்றன. இதுவும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.

 

 

 

 

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.