அள்ளலாம் 15 லட்சத்தை ஆர்ஓ வாட்டர் தொழிலில்!
மனிதர்கள் உணவில்லாமல் கூட வாழ முடியும். ஆனால் தண்ணீர் இல்லாமல் உயிர் வாழ முடியாது. அந்த அளவிற்கு தண்ணீர் தேவை அதிகமாக உள்ளது. அதனால் நீங்கள் ஆர்ஓ வாட்டர் தொழிலை தொடங்கினால் அதில் தற்போதுள்ள நிலையில் மிக சிறப்பாக நடத்தலாம். கிராமத்தில் தான் குழாய் தண்ணீரை குடிக்கிறார்கள். ஆனால் நகரத்தில் குழாயில் தண்ணீரே வந்தாலும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரைதான் குடிக்கிறார்கள்.
அதனால் இந்த தொழில் எப்பொழுதும் உங்களுக்கு லாபகரமானதாக இருக்கும். இந் த தொழிலை தொடங்குவதற்கு பெயர் அடையாளத்தை கொண்டு ஒரு நிறுவனத்தை பதிவிட வேண்டும். பின்னர் பிஐஎஸ்-ல் இருந்து அனுமதி பெற வேண்டும்.
தேவைப்படும் உரிமங்கள்
சிறு அளவிலான தொழில் பதிவு சான்றிதழ். ஏஒஏ மற்றும் எம்ஓஏ, பிஐஎஸ்சிலிருந்து ஐஎஸ்ஐ சான்றிதழ். உள்ளுர் மாசு வாரிய அலுவலகத்திலிருந்து மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ், ஆய்வகத்திலிருந்து தீவன நீர் பரிசோதனை அறிக்கை, பூச்சிக்கட்டுப்பாடு சான்றிதழ் ஆகியவை தேவைப்படும்.
எவ்வளவு முதலீடு தேவை?
இந்த தொழிலை தொடங்குவதற்கு 1 லட்சத்திலிருந்து 50 லட்சம் வரை முதலீடு செய்ய வேண்டியிருக்கும். நீங்கள் வைக்கும் தண்ணீர் ஆலையை பொறுத்து முதலீடு மாறுபடும். ஒரு மணி நேரத்தில் 100 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை தயாரிக்க முடியும்.
லாபம் எவ்வளவு கிடைக்கும்?
தினமும் 8,000 பாட்டில்கள் தயாரிக்க முடியும். ஒரு பாக்சில் 12 பாட்டில்கள் இருக்கும். இதனுடைய விலை ரூ.80க்கு விற்கலாம். ஒரு மாதத்திற்கு 24 ஆயிரம் பாட்டில்கள் தயாரிக்கலாம். இதன் விலை ரூ.19,20,000. மாதத்தில் கிடைக்கும். 24 ஆயிரம் பாட்டில்கள் தயாரிப்பதற்கு குடிநீரின் உற்பத்தி செலவு மாதந்தோறும் சுமார் ரூ.5 லட்சம் வரும். வருமானத்திலிருந்து செலவை கழித்தால் ரூ.14,20,000 வரை சம்பாதிக்கலாம்.