எல்ஐசியின் புதிய அறிமுகம் “ஆனந்தா செயலி”
ஆத்ம நிர்பார் திட்டத்தின் ஒரு பகுதியாக, எல்ஐசி முகவர்கள் வாடிக்கையாளர்களை பல்வேறு பாலிசிகளில் சேர்க்கும் போது காகிதம் இல்லாமல் மின்னணு முறையிலேயே அவர்களின் விவரங்களைப் பெற்று சமர்ப்பிக்கும் வகையில் ‘ஆனந்தா’ என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த புதிய செயலி மூலம் வாடிக்கையாளர் களின் விவரங்களை ஆதார் எண் அடிப்படையில் உறுதி செய்யவும், காகிதத்தில் விண்ணப்பப் படிவம் இல்லாமல் மின்னணு முறையிலேயே விண்ணப்பங்களைப் பெறவும் முகவர்களால் முடியும். இதன் மூலம் அவர்களின் பணி விரைவில் முடிவதோடு, அதிக வாடிக்கையாளர்களை பெறவும் முடியும். இந்த புதிய செயலியை எல்ஐசி இந்தியா தலைவர் எம்.ஆர்.குமார் சமீபத்தில் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.