எல்.ஐ.சி.யின் புதிய திட்டம் பீமா ஜோதி ஆயுள் காப்பீட்டு பாலிஸி..!
எல்.ஐ.சி. தற்போது பீமா ஜோதி ஆயுள் காப்பீட்டு பாலிஸியை அறிமுகம் செய்துள்ளது. இந்த பாலிஸியில் ஒவ்வொரு ஆண்டு முடிவிலும், பாலிஸி தொகையில் ரூ.1,000த்திற்கு ரூ.50 கூடுதல் தொகை வழங்கப்படும்.
இத்திட்டத்தில் குறைந்தபட்சமாக ரூ.1 லட்சம் முதலீடு செய்யலாம். உச்சபட்ச முதலீட்டு தொகைக்கு வரம்பு இல்லை. பாலிஸி காலத்தில் 5 ஆண்டுகள் முடிந்த பின்னர் விரும்பிய தொகையை உறுதி பணமாக அடைய விரும்பும் வாடிக்கையாளர்கள் மாதம் எவ்வளவு பிரீமியம் செலுத்த வேண்டும் என்பதை கணக்கிட்டு தங்கள் விருப்பம் போல 15 முதல் 20 ஆண்டுகள் வரையிலான கால கட்டத்தை தேர்வு செய்யலாம்.
பிறந்து 90 நாட்கள் நிறைவு செய்த குழந்தைகள் முதல் 60 வயதான முதியவர்கள் வரை இந்த பாலிஸியில் சேர்ந்து பயனடையலாம். இந்த பாலிஸிக்கான பிரிமீயத் தொகையை மாதம், காலாண்டு, அரையாண்டு, ஆண்டு என குறிப்பிட்ட இடைவெளியில் செலுத்தலாம்.