போணியாகாத ரிசர்வ் வங்கியின் கடன் பத்திரங்கள்..!
மத்திய அரசு செலவினங்களுக்கும், அடிப்படை கட்டமைப்பு மேம்பாட்டிற்கென பொது மக்களிடம் நிதி திரட்டும் (கடன்..!) நோக்கில் கடன் பத்திரங்களை வெளியிட்டுள்ளது. இது பற்றி கடந்த 20ம் தேதி ரிசர்வ் வங்கி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதில், “மத்திய அரசின் கடன் பத்திரங்களில், பல்வேறு காலகட்டங்களில் முதிர்வு பெறும் வகையிலான ரூ.31,000 கோடி மதிப்பிலான கடன் பத்திரங்கள் கடந்த வாரத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.
இதில் 10 ஆண்டுகளில் முதிர்வு தொகை வழங்கும் கடன் பத்திரங்கள் ரூ.11,000 கோடி அளவிற்கும், 4 ஆண்டுகளில் முதிர்வு பெறும் வகையிலான ரூ.10,700 கோடி கடன் பத்திரங்களும், 40 ஆண்டுகளில் முதிர்வு பெறும் வகையிலான ரூ.3,300 கோடி மதிப்பிலான கடன் பத்திரங்களும் விற்பனையாகவில்லை. வரும் வாரங்களில் இந்த கடன் பத்திரங்கள் மீண்டும் நிதிச் சந்தையில் முதலீட்டாளர்களிடம் விற்பனைக்காக முன் வைக்கப்படும்” எனக் கூறப்பட்டுள்ளது.