குறைந்த வட்டியில் பர்சனல் லோன்…
இன்றைய சூழலில் எந்தவொரு பண நெருக்கடி ஏற்பட்டாலும் விரைவாக நமக்குத் தேவைப்படும் பணத்தை ஏற்பாடு செய்வதற்கான எளிய வழிகளில் ஒன்று தான் பர்சனல் லோன் எனப்படும் தனிநபர் கடன். அரசு அல்லது தனியார் ஊழியராக இருந்தாலும்,சுய தொழில் செய்பவர்களாக இருந்தாலும் வங்கிகள் அவர்களுக்குக் கடன்களை வழங்குவதற்கு முன்வருகின்றனர்.
கல்விக்கானச் செலவு முதல் திருமணம், மருத்துவ செலவுகள் என எல்லாவற்றிற்கும் தனிநபர் கடன்களை வாங்கும் பழக்கம் மக்களிடம் அதிகரித்துள்ளது. மற்ற வீட்டுக்கடன், வணிக கடன் போன்ற மற்ற வங்கிக் கடன்களைப் போல இல்லாமல் தனிநபர் கடன் பெற வேண்டும் என்றால் எந்த பொருளையோஅல்லது நிலத்தையோ அடமானம் வைக்கத் தேவையில்லை. அதே சமயம், கடன் வாங்க நினைப்பவர்களின் சிபில் ஸ்கோர் என்பது வங்கிக்குத் தேவைப்படும் அளவிற்கு இருப்பது அவசியமான ஒன்று.
5 ஆண்டுகளுக்கு ரூபாய் 5 லட்சம் வரை தனிநபர் கடன்களுக்கு தற்போது மிகக்குறைந்த வட்டியில் சில வங்கிகள் வழங்குகின்றன. இதோ என்னென்ன வங்கிகள் என்பது? குறித்து இங்கே விரிவாகத் தெரிந்துக் கொள்வோம். குறைந்த வட்டியில் தனிநபர் கடன்களை வழங்கும் வங்கிகளின் லிஸ்ட்
பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா 8.9 %
பஞ்சாப் நேஷனல் வங்கி – 9.8%
பேங்க் ஆஃப் பரோடா – 10.2%
கோடக் மஹிந்திரா – 10.25 %
கனரா வங்கி – 13.15%
ஆக்சிஸ் வங்கி – 12%
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா – 10.70%
பாரத ஸ்டேட் வங்கி – 10.55%
HDFC வங்கி – 11%
இந்தியன் வங்கி – 10.3%
ஐடிஎஃப்சி வங்கி – 10.49%
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா – 11.2%
மேற்கண்ட வங்கிகள் குறைந்த வட்டியில் தற்போது தனிநபர் கடன்களை வழங்கி வருகின்றனர். 5 ஆண்டுகள் நீங்கள் தவணைக்காலமாக வைத்திருந்தால் தான் இந்த வட்டி விகிதம். அதே சமயம் நீங்கள் ரூ 10 லட்சம் வரை தனிநபர்கள் கடன்களை வாங்கும் போது வட்டி விகிதம் சற்று குறையக்கூடும்.