மாதாந்திர டெபாசிட்டில் வரிச்சலுகை
ஆர்.டி திட்டத்தில் சேர்ந்து இருக்கும் தொகையில் சுமார் 90% வரை கடன் அல்லது ஓவர் டிராப்ட் வாங்கும் வசதி இருக்கிறது. கடனுக்கான வட்டி விகிதம் ஆர்.டி வட்டியை விட ஓரிரு சதவிகிதம் அதிகமாக இருக்கும்.
ஆர்.டி மூலம் முதலீடு செய்யப்படும் தொகைக்கு மற்றும் வட்டி வருமானத்துக்கு வரிச் சலுகை எதுவும் கிடையாது. மூத்த குடிமக்களுக்கு நிதியாண்டில் ரூ.50,000 வரை ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி வருமானத்துக்கு வரி கிடையாது. ஆர்.டி-யும் சேர்த்து இந்தக் கணக்கு என்பதால், ஒருவர் வேறு எந்த வட்டி வருமானமும் இல்லாத நிலையில் ஆர்.டி மூலம் நிதியாண்டில் கிடைக்கும் வட்டி வருமானம் ரூ.50,000-க்கு வரி இல்லை
இதேபோல் மூலத்தில் பிடிக்கப்படும் டி.டி.எஸ் மூத்த குடிமக்களுக்கு ரூ.50,000 வரைக்கும் விதிவிலக்கு இருக்கிறது. இந்த டி.டி.எஸ் தொகை 60 வயதுக்குட்பட்ட பொதுப் பிரிவினருக்கு ரூ.40,000 ஆக இருக்கிறது. பொதுத்துறை, தனியார் மற்றும் வெளிநாட்டு வங்கி எதில் வேண்டுமானலும் ஆர்.டி கணக்கைத் தொடங்க முடியும். இப்போது ஆன்லைன் மூலமும் இந்தக் கணக்கைத் தொடங்கலாம்.