வெற்றிகரமான தொழிலதிபருக்கு மாத்தி யோசிக்கும் மந்திரங்கள்!
தொழில்முனைவோராக முத்திரை பதித்த முன்னோடிகள் எல்லாருமே நம்மை போன்றவர்கள் தான். ஆனால், அவர்களின் அணுகுமுறையில் தான் வேறுபாடு இருக்கிறது. அந்த அணுகுமுறைகளில் முக்கியமானதாக தொழில் வல்லுனர்கள் அடையாளம் காட்டுவது மேற்கண்ட இவற்றை தான்.
தொடர் முதலீடு:
தீவிர தொழில்முனைவோர் தொடர்ந்து முதலீட்டிற்கான வாய்ப்புகளை தேடிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் எதை யும் முடிவாக கருதுவதில்லை. அவர்கள் சம்பாதிப்பதை விட குறைவாக செலவு செய்து, லாபத்தை மறு முதலீடு செய்கின்றனர்.
பிரச்னையில் தீர்வுகள்
தொழில்முனைவோர் பிரச்னைகளை கண்டு ஒடுங்கிப்போவதில்லை; அஞ்சுவதும் இல்லை. தடைகள் தாண்டுவதற்கு என்பதே அவர்களின் எண்ணமாக இருக்கிறது. எனவே பிரச்னைகள் வரும் போது அவற்றை அவர்கள் வாய்ப்புகளாகவே பார்க்கின்றனர். அவர்கள் எப்போதுமே முன்னேற்றத்திற்கான தீர்வுகளை தேடிக் கொண்டிருக்கின்றனர்.
சுயதிறன் வளர்ப்பு:
தொழில்முனைவோர் எப்போதும் தங்கள் திறனில் முதலீடு செய்து அதை மேம்படுத்திக்கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
சொத்து மதிப்பு:
தொழில்முனைவோர் தங்கள் நிறுவனத்தின் உரிமையை காத்து, அதன் மதிப்பை உயர்த்தும் வகையில், எதிர்கால நோக்கில் நீண்டகால முதலீடு செய்கின்றனர்.
பலத்தில் கவனம்:
வெற்றிகரமான தொழில்முனைவோர் தங்கள் பலம் மற்றும் பலவீனங்களை அறிந்திருக்கின்றனர். தங்கள் பலத்தில் கவனம் செலுத்தி பலவீனமான விஷயங் களை உரியவர்களிடம் ஒப்படைக்கின்றனர்.