சுலப முறையில் மார்க்கெட்டிங்
வீட்டிலோ அல்லது கிராமங்களில் தயாராகும் பொருட்களை எவ்வாறு சந்தைபடுத்தி லாபம் ஈட்டுவது சுலபமே. தற்போதைய காலத்தில் சந்தைபடுத்துதல் எளிமையாகிவிட்டது. அதற்கான வழிகளை அறிவோம்.
Amazon Selling Program : Amazon பற்றி நிச்சயம் நீங்கள் கேள்விபட்டிருக்கக்கூடும். ஏதேனும் பொருட்கள வாங்கியிருக்கவும் கூடும். ஆனால் அந்த பொருட்களை விற்பவர்கள் யார் என்று தெரியுமா? நிச்சயமாக அமேசான் இல்லை. ஆம். சிறு தொழில் செய்வோர்கள், பொருட்களை தயாரிப்போர்கள், வாங்கி விற்கும் தரகர்கள் போன்றோர்களே அந்த பொருட்களை விற்கிறார்கள். அமேசான் அந்த பொருட்களுக்கான சந்தையை மட்டும் உருவாகியிருக்கிறது. மேலும் அந்த பொருட்களை இடம் மாற்றும் வேலையே மட்டும் செய்கிறது. அதுவும் நேரடியாக இல்லாமல், அதற்கும் வேலையாட்கள் இருக்கிறார்கள்.
ஆக, பொருட்களை விற்பவர் ஒருவர், அதை வாங்குபவர் ஒருவர், அதை கொண்டு சேர்பவர் ஒருவர். தற்போது இங்கு உங்களின் நிலை என்ன? பொருள் விற்பவராக மாறி, உங்களின் படைப்புகளை விற்கவேண்டியதுதானே. அதற்கான விளம்பரம் மற்றும் சந்தையை அமேசானே கவனித்துகொள்ளும். நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான். அமேசானில் விற்பவராக இணைந்து, பொருட்களின் ஆணை வரும்போது அதை பொட்டலம் செய்து அனுப்ப வேண்டியது மட்டும்தான். கொண்டு சேர்பவர் நேரடியாக உங்களிடம் இருந்து அதை பெற்றுக்கொண்டு சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்துவிடுவார். பணம் உங்கள் கணக்கில் வந்துவிடும்.
Flipkart : இதுவும் அமேசான் போன்றதே. அமேசான் மூலம் உங்கள் பொருட்களை உலகம் முழுதும் விற்பனை செய்யலாம். ஆனால் ப்ளிப்கார்ட் மூலம் இந்தியாவில் மாட்டுமே விற்பனை செய்யலாம். மாற்றபடி மற்றம் எதுவுமில்லை.
Facebook Sale | Marketplace : Facebook அறியாதோர் தற்போது யாரும் இல்லை என்றுதான் கூறவேண்டும். ஆனால் இதில் விற்பனை பொருட்களை செய்யலாம் என்பது எத்தனை பேருக்கு தெரியும். Facebook சென்றால் Marketplace என்ற Option இருக்கும். இங்கு சென்று உங்கள் பொருட்களை விற்பனை செய்யலாம்.
மாத வருமானம் எவ்வளவு :
நீங்கள் உற்பத்தி செய்த ஒரு பொருள்(உதாரணமாக: ஏதேனும் ஒரு இலை பொடி, வற்றல் பொட்டலம்) ஒன்றின் விலை 30 ருபாய் என்று கொள்வோம். உங்களுக்கு தினமும் 250 ஏதேனும் பொட்டலங்கள் Order வருகிறதென்றால், ஒரு நாளைக்கு உங்களுக்கு 7500 ருபாய் வருமானம் வரும்.
காலபோக்கில், உங்களின் தரம் அதை செய்யவேண்டும். தினமும் 7500 என்றால், ஒரு மாதத்திற்கான வருமானம் 2,25000 ருபாய். சந்தைப்படுத்துதலுக்கான தரகு நீக்கினால் நிச்சயம் ரூ-.2 லட்சம் மாதம் ஈட்டலாம். உற்பத்தி செலவு என்று பார்க்கும்போது, இது மாதிரியான பொருட்களுக்கு குறைந்த செலவு மட்டுமே ஆகும். ஒரு 50000 உற்பத்தி செலவு என்று வைத்துக்கொள்ளலாம். ஏனெனில் தினமும் 250 பேருக்கு உற்பத்தி செய்ய இவ்வளவாவது ஆகும். இது ஒன்றும் பெரிய விஷயமல்லவே.