நினைவுகளை சிலையாக்கலாமே !
நம் பிறந்தநாள், திருமண நாள் ஞாபகங்களை சேகரித்து வைக்க உரிய காரணியாக மூளை செயல்பட்டாலும் கூட நம் ஞாபகங்களை மாற்றாரும் தெரிந்து கொள்ளும் வகையாக சேகரிக்கும் போட்டோ நம்மை எப்போதும் உயிர்ப்புடன் வைத்துக் கொள்ளும் என்பதில் மாற்று இல்லை.
நமது குழந்தை பருவத்தில் எடுக்கும் போட்டோ, நம்ம திருமண நாளில் உருவாக்கப்படும் ஆல்பத்தை 15 ஆண்டுகள் 20 ஆண்டுகள் கழித்து பார்க்கும்போது ஒரு வியப்பை நமக்கு கொடுக்கும்.
ஆனால் காலத்தின் ஓட்டத்தில் புதிய புதிய சிந்தனைகளால் ஞாபகங்களை சேகரிக்க உருவாக்கியுள்ள ஒரு புதிய பரிமாணம் தான் காஸ்டிங் முறை.
தமிழகத்தில் இந்த செயல்பாடுகள் சென்னை, மதுரை, கோவை பகுதிகளில் இருந்தாலும் திருச்சியில் இல்லாமல் இருந்தது. தற்போது திருச்சியில் முதன்முறையாக மலர் ரவி அவர்கள் துவங்கி தற்போது வெற்றிகரமாக 2 ஆம் ஆண்டில் அடியெழுத்து வைத்திருக்கிறார்.
இந்த தொழில் குறித்து மலர் ரவி கூறுகையில்,
வித்தியாசமாக எதையாவது செய்து சாதிக்க வேண் டும் என்று கருதி துவங்கினேன். முதல்முதலில் எனது குழந்தையின் கை, கால்களை அச்செடுத்து சிலையாக செய்து பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. அதன்பிறகு மேலும் இத்தொழில் குறித்த நுணுக்கங்களை அறிந்து கொண்டு தற்போது வெற்றிகரமாக வாடிக்கையாளர்களின் விரும்பத்திற்கேற்ப செய்து வருகிறேன்.
படங்களில் உள்ள பாதங்களை வருங்காலத்தில் பார்க்கும் ஒவ்வொரு வரும் தனது குழந்தை பருவ ஞாபகத்திற்கு சென்று திரும்புவார்கள் என்றார்.
குழந்தைகளின் பிஞ்சு கைகள், மலர் போன்ற பாதம், சகோதர- சகோதரிகள், பெற்றோர்- குழந்தைகள், காதலர்கள், திருமண நாளன்று தம்பதிகளின் கோர்த்த கரங்கள், செல்லப் பிராணிகளின் பாதங்கள் என பல அம்சங்களில் அச்சு எடுத்து சிலையாக செய்து கண்ணாடி ப்ரேம் செய்து தருகிறோம்.
நீங்களும் உங்கள் ஞாபகங்களை சேகரிக்க 90 80 53 61 89 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.