நகைக் கடன் வாங்குவோருக்கு காப்பீடு வழங்கும் முத்தூட் ஃபைனான்ஸ்:
தங்கக் நகைக் கடன் வழங்கும் முத்தூட் ஃபைனான்ஸ், தங்க நகைகளுக்குக் காப்பீடு வழங்குவதற்காக பஜாஜ் ஆலியன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் ஓர் ஒப்பந்தம் செய்துள்ளது.
முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் தங்க நகைகளை அடகு வைக்கும் வாடிக்கையாளர்களுக்கு கடன் செலுத்தப்பட்ட பின்னர் அந்த நகைகளுக்கு முத்தூட் கோல்டு ஷீல்டு என்ற திட்டத்தின்படி நகைக் காப்பீடு அளிக்கிறது.
இந்தத் திட்டத்தின்படி கொள்ளை போனாலோ அல்லது காப்பீடு செய்யப்பட்ட நபரின் வீட்டிலிருந்து திருடு போனாலோ, போக்குவரத்து சமயங்களில் காணாமல் போனாலோ, இயற்கை பேரழிவுகளில் இழந்துவிட்டாலோ காப்பீடு வழங்கப்படும். வெள்ளம் உள்ளிட்ட 13 பேரழிவுகளுக்கு இத்திட்டத்தின் கீழ் காப்பீடு கிடைக்கும். இந்தத் துறையில் மற்ற நிறுவனங்கள் நிர்ணயித்துள்ள பிரீமியத் தொகையை விட மிகக் குறைந்த பிரீமியத்தில் இந்தத் திட்டத்தை முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனம் செயல்படுத்துகிறது.
தங்க நகைகளுக்கான காப்பீட்டுத் தொகை சில காப்பீட்டு நிறுவனங்களால் காப்பீடு செய்யப்பட்ட மொத்த வீட்டுக் காப்பீட்டுக் கொள்கையில் அதிகபட்சம் 15 சதவீதம் வரையில் கிடைக்கிறது. ஆனால் முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் இத்திட்டத்தில் அப்படி எந்தக் கட்டுப்பாடும் இல்லை.