ரிஸ்க் எடுப்பவர்களுக்கான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்!
ஆக்ஸிஸ் மல்ட்டிகேப் ஃபண்ட் : ஆக்ஸிஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் பெரிய, நடுத்தர மற்றும் சிறிய நிறுவனப் பங்குகளில் கலந்து முதலீடு செய்யும் புதிய திட்டமான ஆக்ஸிஸ் மல்ட்டிகேப் ஃபண்டை அறிமுகம் செய்துள்ளது.
குறைந்தபட்சம் 5,000 ரூபாயி லிருந்து முதலீட்டைத் தொடங்கலாம். மாதம் தோறும் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யும் வசதியும் உள்ளது. முழுவதும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப் படுவதால், ரிஸ்க் எடுக்கும் திறன் உடைய முதலீட்டாளர்கள் மட்டும் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.
ஹெச்.டி.எஃப்.சி மல்ட்டிகேப் ஃபண்ட் : ஹெச்.டி.எஃப்.சி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமும் மல்ட்டிகேப் வகை திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டம் முழுவதும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுவதால், ரிஸ்க் எடுக்கும் திறனுடைய முதலீட்டாளர்கள் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம். பங்குச் சந்தை குறியீடுகள் சற்றுக் குறைந்துள்ள நிலையில் இது மாதிரியான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வது அதிக லாபத்தைத் தரும்.
நிப்பான் இந்தியா தாய்வான் ஈக்விட்டி ஃபண்ட் : ஆசியாவின் வளரும் தைவான் சந்தையில் முதலீடு செய்யும் திட்டத்தை நிப்பான் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டம் முழுவதும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது. மேலும், வெளி நாடுகளில் முதலீடு செய்யும்போது கரன்சி மதிப்புகளில் ஏற்படும் மாற்றங்களும் முதலீட்டில் மாற்றத்தைக் கொடுக்கும். அதனால், ரிஸ்க் எடுக்கும் திறனுடைய முதலீட்டாளர்கள் மட்டும் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.