அலுவலக கூட்டம் வெற்றி பெற நச்னு… 10 பாயின்ட்
அலுவலக கூட்டம் வெற்றி பெற நச்னு… 10 பாயின்ட்
அலுவலக கூட்டங்கள் தகவல் தொழில் நுட்ப வசதியை பயன்படுத்தி, உயர் அதிகாரி களுடனோ, அல்லது உடன் பணியாற்றுவோரிடமோ, தொடர்பு கொண்டு ஆலோசனைகளில் பங்கேற்க முடிகிறது. ஆனால், நேரில் சந்தித்து ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது தான் சிறப்பான கூட்ட நடைமுறையாக இருக்கும். அலுவலக கூட்டங்களினால் நல்ல பலன்களை பெற கவனிக்க வேண்டிய சில விஷயங்களை இங்கே பார்ப்போம்.
-
- கூட்டம், உங்கள் அலுவலகத்திலா அல்லது வெளியிலா என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும். இடம், பொருள் முடிவாகிவிட்டாலே, பாதி சக்சஸ்.
- வரையறுக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல், விவாதிக்க வேண்டிய விஷயங்களை முன்பே திட்டமிடுதல், நோக்கத்தை ஊழியர்களிடம் தெளிவாகக் கூறுதல், சிக்கல்கள் குறித்து முன்கூட்டியே குறிப்பெடுத்து அதற்கான தீர்வுகளை விவாதித்தல் மற்றும் அனைத்து விவகாரங்களையும் பேசுவதற்கு நேரம் போதுமானதா என்பதை சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.
- என்ன விஷயங்களுக்கு முன்னுரிமை என புரிந்து அதற்கேற்ப நேரத்தை ஒதுக்குங்கள். குறைவான நேரம், சிறந்த பலன் என்பது கூட்டத்தின் மையக் கருவாக இருக்கட்டும்.
- கூட்டத்திற்கான ஏற்பாட்டிற்கு பொருத்தமான நபரைத் தேர்ந்தெடுப்பது அவசியம், சிக்கல்களை தீர்க்க தேவை இருந்தால், தீர்வுகளை கொடுப்பவ ர்களை அருகில் வைத்துக் கொள்ளவும்.
-
- கூட்டத்திற்கு தொடர்பில்லாத நபர்களை அனுமதிக்காதீர்கள். அது மற்றவர்களுக்கும் எதிர்மறையை கொடுக்கும். தொழில் வளர்ச்சிக்கான கூட்டமென்றால் அனைவரையும் ஒரே இடத்தில் அமர வைத்து பேசலாம்.
-
- ஊழியர்களுக்கான பிரச்சனை சம்பந்தமான கூட்டம் என்றால் எல்லோரையும் ஒரே இடத்தில் வைத்து கூட்டம் நடத்தக் கூடாது. ஜூனியர்ஸ், சீனியர்கள் முன்னிலையில் சில விஷயங்களை பேச தயாராக இருக்கமாட்டார்கள். எனவே தனித்தனியாக ஆலோசனைகளை நடத்துவது நல்லது.
-
- ஊழியர் கூட்டம் நடத்துவது ஒருவருக்கொருவர் நம்பிக்கையை வளர்க்க வழிவகுக்கிறது, புதிய யோசனைகளை உருவாக்க உதவுகிறது, சீனியர்கள் திறமையை காண்பிக்க உதவுகிறது.
-
- அதிகம் பேசும் நபர்களை, பேசியதையே மீண்டும் மீண்டும் பேசுபவர்களை தவிர்க்க, ஒவ்வொருவருக்குமான, கால நேர வரம்புகளை முன்கூட்டியே ஒதுக்குங்கள்.
-
- கூட்டத்தில் பேசப்படும், விஷயங்களை, முக்கிய விஷயங்களை, முடிவுகளை குறிப்பெடுத்து கொள்ள வேண்டியது அவசியம். காட்சிகள் மற்றும் விளக்கக்காட்சிகளைப் ப்ரொஜக்டரில் பயன்படுத்தலாம். ஆனால் அவற்றைச் சுருக்கமாக பயன்படுத்தவும்.
- சரியான நேரத்திற்கு கூட்டம் தொடங்கி நிர்ண யிக்கப்பட்ட நேரத்திற்குள் முக்கிய விஷயங் களை பேசி முடிக்கவும். தேவை இருந்தால் மட்டுமே கூட்ட நேரத்தை அதிகப்படுத்தவும். தேவையற்ற பேச்சினால் ஏற்படும் நேர விரயம் சலிப்பு தட்டுவதோடு கூட்டத்தின் முக்கிய விஷயங்களை மறக்கச் செய்துவிடும்.