பணத்தை திருப்பித்தர துவங்கிய பிஏசிஎல்…
PACL வீழ்ந்த வரலாறு… பணம் திரும்ப கிடைக்குமா.. மினி தொடர் – 4
பிஏசிஎல் நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் ஒருபுறம் என்றால், பிஏசிஎல்லில் பணம் கட்டியவர்கள் பணம் பெற உங்கள் ஆவணங்களை ஒப்படைக்கவும் என்று கூறி சிலர் முதலீட்டாளர்களிடம் ஒரிஜினல் ஆவணங்களை பெற்றுக் கொண்டு ஏமாற்றிய சம்பவங்களும் அரங் கேறத் தொடங்கின. இதையடுத்து செபி, “பிஏசிஎல் வாடிக்கையாளர்கள் அசல் ஆவணங்களை தங்க ளிடம் பத்திரமாக வைத்திருக்க வேண்டும்” என எச்சரிக்கை செய்யும் சூழல் உருவானது. செபி யின் அறிவுறுத்தலின்படி பலரும் முதலீடு குறித்த தங்களின் ஆவணங்களை வைத்து விண்ணப்பிக்கத் தொடங்கினர். விண்ணப்பித்தவர்கள் தங்களின் பணம் ரீஃபண்ட் கிடைக்கப் பெறும் நிலையை அறிய தமிழக முதலீட்டாளர்கள் 044-39571985 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும் என அறிவித்தது. பின்னர் இந்திய அளவில் ஒரு ஹெல்ப்லைன் எண்ணை செபி அறிவித்தது.
அத்துடன் முதலீட்டாளர்கள், விண்ணப்பங் களை தங்கள் தகவல்களுடன் SEBI-க்கு 562632 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புவதன் மூலமும் https://sebicommitteepaclrefund.com என்ற இணைய தளத்தில் பதிவேற்றம் செய்வதன் மூலமும் விண்ணப்பித்து விண்ணப்ப நிலையை தெரிந்து கொள்ளலாம் என அறிவித்தது. அத்துடன் ரீஃபண்ட் தொடர்பாக வாடிக்கை யாளர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு விரிவான விளக்கத்தை செபி ஓர் அறிவிப்பாக வெளியிட்டது. அந்த அறிவிப்பில்,
-
- முதலீட்டாளர்களின் பான்அட்டை பெயரும், பி.ஏ.சி.எல் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள பெயரும் வேறுபட்டிருந்தாலும் கூட விண்ணப் பிக்கலாம். வாடிக்கையாளரின் பெயருக்கான ஆதாரங்களை ஒப்படைத்தால் போதும்.
-
- பான்அட்டை கூட இல்லாத மைனர் குழந்தையின் பெயரில் முதலீடு செய்யப் பட்டிருந்தாலும் க்ளெய்ம் செய்ய விண்ணப்பிக் கலாம். அதற்கு, மைனர் குழந்தையின் பெயரில் பான்அட்டைக்கு விண்ணப்பித்துப் பெற வேண்டும். பான்அட்டை எடுக்க எந்த வயது வரம்பும் இல்லை என்பதால் தாராளமாக பிள்ளைகள் பெயரில் பான்கார்டு எடுக்கலாம்.
-
- ரீஃபண்ட் தொகையைக் கொடுப்பது குறித்த விவரங்களை, விண்ணப்பங்களின் அளவைப் பொறுத்து லோதா கமிட்டியே முடிவெடுக்கும். முதலீட்டுக்கான வட்டி குறித்து தற்போது எதுவும் குறிப்பிடப்படவில்லை.
-
- ஒரு முதலீட்டாளரின் க்ளெய்ம் தொகை என்பது அவரது பி.ஏ.சி.எல் பதிவு எண்ணில் குறிப்பிடப்பட்டிருக்கும் செலுத்தப்பட்ட முதலீட்டு அளவாகும். அதனைப் பெறுவதற்கு, க்ளெய்ம் விண்ணப்பத்துடன், பி.ஏ.சி.எல் சான்றிதழின் நகல் மற்றும் பணம் செலுத்திய ரசீதுகளின் நகல்களையும் இணைத்து அப்லோட் செய்ய வேண்டும். அவற்றைப் பரிசீலனை செய்த பின் முதலீடு செய்த பணம் திருப்பியளிக்கப்படும்.
-
- ரசீதுகளையோ, சான்றிதழையோ தவற விட்டவர்களுக்கு முதலீட்டைத் திருப்பிச் செலுத் துவது குறித்து லோதா கமிட்டி எந்த முடிவையும் அறிவிக்கவில்லை.
-
- இந்தத் திட்டத்தில் சேர்ந்து பணம் கட்டிய முதலீட்டாளர்களில் எவரேனும் இறந்துவிட்டால், அவர்களுக்கான க்ளெய்ம் பெறும் விவரங்கள் குறித்து தற்போது எதுவும் குறிப்பிடப்படவில்லை. தற்போதுள்ள நிலையில், உயிரோடிருக்கும் முதலீட்டா ளர்கள் க்ளெய்ம் செய்வது குறித்து மட்டுமே கூறப்பட்டுள்ளது. க்ளெய்ம் பெறுவதற்கு, இறந்த முதலீட் டாளர்களின் வாரிசுகள் விண்ணப் பித்தால் அது குறித்து லோதா கமிட்டி முடிவு செய்யும்.
-
- பி.ஏ.சி.எல் பாண்ட் சான்றிதழ் மற்றும் ரசீதுகளை பி.ஏ.சி.எல் நிறுவனத்தின் வசம் ஒப்படைத்து, அதற்கான ஒப்புதலை (ணீநீளீஸீஷீறீமீபீரீமீனீமீஸீt) மட்டும் கைவசமிருப்பவர்கள், அதனை க்ளெய்ம் செய்வதற்குப் பயன்படுத்த இயலாது. அது குறித்து லோதா கமிட்டி இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.
-
- முதலீட்டாளர்கள் அப்லோட் செய்யும் ரசீதுகளின் எண்ணிக்கைக்கு எந்த உச்சவரம்பும் கிடையாது. கைவசம் இருக்கும் அனைத்து பணம் செலுத்திய ரசீதுகளையும் அப்லோட் செய்து க்ளெய்ம் செய்யலாம். இந்த க்ளெய்ம் விண்ணப்பத்தை ஆன்லைன் மூலம் அனுப்ப மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
-
- கடந்த முறை ரூ.2,500 வரை முதலீட் டாளர்களுக்குத் திருப்பியளித்த போது, விண்ணப்பிக்காதவர்களும் கூட தற்போது விண்ணப்பிக்கலாம்.
-
- பான்அட்டை இல்லாத முதலீட்டாளர்கள், அதற்குப் பதிலாக ஆதார் அட்டையை காட்ட அனுமதியில்லை. உரிய ஆவணங்கள் அனைத் தையும் விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதேபோல், செக்புக் பயன்பாடு இல்லாதவர்கள், வங்கி அதிகாரியிடம் அது குறித்த சான்றிதழ் கடிதத்துடன் இணைக்க வேண்டும். மேலும், பாஸ்புக்கின் முதல் பக்கம் மற்றும் முகவரி எழுதப்பட்டுள்ள பக்கங்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.
- சரியான ஆவணங்களை அப்லோட் செய்த பின்னரும் ‘This PACL number does not exist as per our records’ என்ற மெசேஜ் வந்தால், பி.ஏ.சி.எல் பதிவு எண் மற்றும் ஆவணங்கள் அனைத்தையும் ஸ்கேன் செய்து பி.ஏ.சி.எல் முதலீட்டாளர்களுக்கான ரீஃபண்ட் பணியைச் செய்து வரும் அலுவலகத்துக்கு மெயில் அனுப்ப வேண்டும். இ-மெயில் முகவரி nodalofficerpacl@sebi.gov.in ஆகும்.