புதிய தலைமுறையின் நவீன சமையலறை நேஷனல் அலுமினியம் மாடூலர் கிச்சன்
ஒரு வீட்டில் உள்ள மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு அடிப்படையானது அந்த வீட்டில் சமைக்கப்படும் உணவு. சமைக்கப்படும் உணவும் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். உணவுப் பொருள் மட்டுமின்றி சுற்றுப்புறமும் முக்கியம்.
அம்மா சமைக்கும் உணவில் உப்பு, காரம் மட்டுமின்றி பாசமும் கொட்டி சமைக்கப்படுகிறது. அதனால் தான் அது எப்பவும் ருசியாகவே இருக்கிறது.
வீடியோ லிங்:
இன்றைய உலகில் ஒரு வீட்டில் தலைவன், தலைவி என இருவருமே வேலைக்கு சென்று சம்பாதிக்கும் சூழல் உள்ளது.
காலையில் அடுக்கலையில், ‘நேரமாச்சு’.. என்ற எரிச்சலான மனோபாவத்துடன், வேகவேகமாக சமைக்கப்படும் உணவு, வேகாமலும், உப்பு, காரம் சரியான அளவுகளில் இல்லாமலும் போகும் நிலை உண்டாகிறது. அவசரமும், அதிவேகமும் தவிர்க்க முடியாததென்றாலும் அவற்றிற்கு ஒரு வடிகாலாக இருப்பது சூழல். சூழல் தான் முதலில் நம் மனோபாவத்தை மாற்றுகிறது.
உங்கள் எரிச்சலான மனநிலையை கூலாக்கி, அமைதியான மனநிலைக்குள் ஆழ்த்தி செயலாற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது உங்கள் சமையலறை சூழல். அந்த சூழல் தான் தற்போது நவீன உலகில் ‘மாடுலர் கிச்சன்‘ என்றழைக்கப்படுகிறது. அம்மா மட்டுமின்றி, அப்பாவும், குழந்தைகளும் சமையலுக்கு உதவும் வகையில் அனைவரின் மனோபாவத்தையும் சமையலறைக்குள் ஈர்ப்பது மாடுலர் கிச்சன்..!
ஒரு வீட்டில் உள்ள மாடுலர் கிச்சனை பார்த்துவிட்டு அதே போன்ற நமக்கு தெரிந்த மர ஆசாரியை அழைத்து, ஆங்காங்கே பொருள் வைக்கும் செல்ஃப்களை கட்டமைத்து, ஒரு மாடுலர் கிச்சனை வடிவமைத்துவிடலாம் என நினைத்தால் அது தவறாகவே முடியும். அதன் எதிர்காலம், நீடித்திருக்க வாய்ப்பில்லை என்பதே உண்மை நிலை. அதே போல் மாடுலர் கிச்சன் என்றால் மேடையை கடப்பா கல்லில் அமைத்தால் சுத்தப்படுத்துவது எளிது என்ற அளவில் தான் சிந்திக்கிறார்கள். ஆனால் அதைத் தாண்டி பல விஷயங்கள் அங்கே அடங்கியிருக்கின்றன.
வீடியோ லிங்:
இன்றைய நவீன சமையலறையில் கேஸ் ஸ்டவ், மிக்சி, கிரைண்டர் மட்டுமின்றி மைக்ரோ வேவ் அவன், இண்டக்சன், கெட்டில், காபி மேக்கர், சாண்ட்விச் மேக்கர், டோஸ்டர், எலக்ட்ரிக் குக்கர் போன்ற பலவும் அலங்கரிக்கின்றன. அவற்றின் பயன்பாட்டிற்கு ஏற்ப சரியான இடம், அதற்கான மின் இணைப்புடன் எளிமையாக பயன்படுத்தும் வகையில் திட்டமிட்டு, பூச்சி, கரையான் போன்றவற்றின் பாதிப்பு இன்றி, நீண்ட நாட்கள் நீடித்து நிலைத்திருக்கும் வகையில் அமைப்பதே மாடுலர் கிச்சன் அமைப்பதின் நோக்கமாக இருக்க வேண்டும்.
“நாங்கள் அமைத்துத் தரும் ‘மாடுலர் கிச்சன்’ சுமார் 25 ஆண்டுகளுக்கு எந்தவித தொந்தரவும் தராமல் நிலைத்திருக்கும். இல்லத்தரசிகளின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான அழகிய மாடுலர் கிச்சன்கள், 25 ஆண்டுகள் கழித்தும் அதே புதிய பொலிவுடன் காணும் வகையில் வடிவமைத்துத் தருகிறோம்” என்கிறார் ‘நேஷனல் அலுமினியம் மாடூலர் கிச்சன்’ நிறுவனத்தின் உரிமையாளர் ‘ரோட்டேரியன்’ எம்.ஏ.அஹமது இப்ராஹிம்.
20 ஆண்டுகள் அரபு நாட்டில் பணிபுரிந்து அங்குள்ள மாடுலர் கிச்சன் வடிவமைப்பை நம் இந்தியாவில், குறிப்பாக திருச்சியில், முதன்முதலில் அறிமுகப்படுத்தி பலரையும் வியப்பில் ஆழ்த்தி வரும் ‘நேஷனல் அலுமினியம் மாடூலர் கிச்சன்’ திருச்சி-தஞ்சை சாலையில், அரியமங்கலம், ரயில் நகர் பேருந்து நிலையம் அருகில், (ரிலையன்ஸ் மார்க்கெட் அருகில்) அமைந்துள்ளது. உரிமையாளர் எம்.ஏ.அஹமது இப்ராஹிம் அவர்களை சந்தித்து உரையாடினோம்.
வீடியோ லிங்:
சமையலறையில் மாடூலர் கிச்சன் கட்டாயமா..?
ஆரோக்கியத்தை முன் வைத்து சமைக்கப்படும் சமையல் மட்டுமின்றி சமையலறையும் சுத்தமாக இருக்க வேண்டும். பொதுவாக சமையலறையில் சாதம், பால் பொங்கி வடியும். ப்ரஷர் குக்கர் என்றாலும் அதன் நீராவி சுற்றுப்புறங்களில் படியும். தாளிக்கும் போது அதன் எண்ணெய் சுற்றுப்புறத்தில் தெறிக்கும். தோசை ஊற்றினால் மாவு சிதறும். உணவு சமைக்கும் போது இப்படி பல்வேறு வகையாக சுற்றுப்புறங்களில் தேங்கும் நீர், எண்ணெய் பிசுக்குகள் பூச்சிகளை வரிந்து அழைக்கும் இடமாக மாற்றி விடுகிறது.
பெரும்பாலோர் பயன்படுத்தும் சமையலறையில் கரையான், பல்லி மற்றும் பூச்சிகள் காணப்படும். தினமும் சமையலறையை சுத்தம் செய்ய முடியாது. அதுவும் வேலைக்கு செல்லும் பெண்கள் உள்ள வீடு என்றால் மிகவும் சிரமமாகிவிடும். சமையலறையில் பெருகும் பூச்சிகள் தான் நோய் பெருக்கத்திற்கு வழி வகுக்கிறது. அதற்கான தீர்வாகத் தான் இந்த மாடுலர் கிச்சன் அமைகிறது. நம்முடையது அலுமினியம் மாடுலர் கிச்சன் என்பதால் சுத்தம் செய்வது எளிது. பூச்சிகள் அண்டாது. மேலும் குறைவான இடத்தில் பொருட்களை நிறைவாக அடுக்கிப் பயன்படுத்த அலுமினிய மாடுலர் கிச்சன் ஏற்ற இடமாக இருக்கும்.
வீடியோ லிங்:
நீங்கள் வடிவமைத்து தரும் மாடூலர் கிச்சன் மற்றவற்றுடன் எவ்வாறு வித்தியாசப் படுகிறது..?
குறிப்பாக மரம் மற்றும் பிளைவுட்டில் மாடுலர் கிச்சன் அமைத்தால் அவைகள் நாளடைவில் தண்ணீர் பட்டு உப்பி வீணாகி, கரையான் அரித்து மீண்டும் அவற்றை சரி செய்து பயன்படுத்த முடியாத சூழல் ஏற்படுகிறது. ஆனால் நாங்கள் அமைத்து தரும் மாடுலர் கிச்சன் முழுவதும் POWDER COATED அலுமினியம் மற்றும் HIGH PRESSURE LAMINATED (HPL SHEET) ஷீட்களை பயன்படுத்தி இணைத்து உறுதியாகவும், அழகாகவும், நேர்த்தியான முறையில் வடிவமைத்து தருகிறோம். பார்ப்பதற்கு மரத்தினால் ஆன கிச்சனை போலவே இருக்கும்.
திருச்சியில் முதன்முறையாக ஐரோப்பிய, மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் எச்பிஎல் சீட்களை இணைத்து அழகாக வடிவமைக்கின் றோம். ஐரோப்பிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் மாடுலர் கிச்சன் வடிவமைப்பதில் பயிற்சி பெற்ற டெக்னீஷியன்களைக் கொண்டு, அனுபவம் வாய்ந்த இன்ஜினியர் மூலம் திட்டமிட்டு, கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்துடன் ஸ்கெட்ச் செய்து அவுட்லுக் உருவாக்கி, நேர்த்தியான முறையில் வாடிக்கையாளர்களின் ரசனைக்கு ஏற்ப மற்றவர்கள் பார்த்து வியக்கும் வண்ணம் மாடுலர் கிச்சன் அமைத்துத் தருகிறோம். மேலும் எங்கள் மாடுலர் கிச்சன், பராமரிப்பது எளிது. தண்ணீர், நெருப்பு பட்டு வீணாகாது. துருப்பிடிக்காது. கரையான் அரிக்காது. நீண்ட காலம் உழைக்கக் கூடியது. இந்திய தட்பவெப்ப நிலைக்கு ஏற்றதாக எங்களது மாடுலர் கிச்சன் அமைகிறது.
மாடுலர் கிச்சனை என்ன விலையில் அமைத்துத் தருகிறீர்கள்.?
தேவை, இடத்தை பொறுத்து விலை அமைகிறது.
மாடுலர் கிச்சனுக்கு மக்களிடம் எந்த அளவிற்கு வரவேற்பு உள்ளது?
நாங்கள் இது வரை அமைத்துக் கொடுத்த மாடுலர் கிச்சன்களில் சுமார் 25 சதவீதம் பழைய சமையலறையை மாடுலர் கிச்சனாக மாற்றித் தந்தது தான். இதிலிருந்தே தெரிந்து கொள்ளுங்கள் மாடுலர் கிச்சனுக்கான வரவேற்பு என்ன என்று.! பெரும்பாலும் புதிதாக வீடு கட்டுபவர்கள் தங்கள் சமையலறையை புதுமையாக மாடுலர் கிச்சனாகவே வடிவமைக்க விரும்புகிறார்கள். வீடு கட்டத் தொடங்கும் முன்பே எங்களிடம் கிச்சன் அமைப்பதற்கான ஆலோசனை பெறுவார்கள். சைட்டுக்கு சென்று மாடுலர் கிச்சன் மாடலுக்கு எப்படி அறைகள் அமைத்து இருக்க வேண்டும் என்று முன்பே வடிவமைத்து தந்து வருகிறோம். இந்த சேவை மற்றும் ஆலோசனைகளை நாங்கள் இலவசமாகவே செய்து தருகிறோம்.
மேலும் நாங்கள் அனைத்து தொழில்நுட்ப பணிகளையும் எங்கள் இடத்திலேயே முடித்து, பிட்டிங் பணியை மட்டுமே சமையலறையில் செய்கிறோம். அங்கு வைத்து, எந்த முன் பணிகளையும் செய்வதில்லை. அதனால் சமையலறையில் மாடுலர் கிச்சன் அமைத்துத் தரும் பணியை ஒரே நாளில் முடித்துத் தருகிறோம். அதில் வாடிக்கையாளர்களின் ரசனையையும் பூர்த்தி செய்கிறோம்.. கிச்சன் அமைத்துத் தருவதோடு எங்கள் வேலை முடிந்துவிடாமல் சர்வீஸ் வாரண்டியும் தருகிறோம். ஆனால் இது வரை நாங்கள் அமைத்துக் கொடுத்த மாடுலர் கிச்சன் வாடிக்கையாளர்களிடமிருந்து எந்தவித புகார்களும் வந்ததில்லை.
வீடியோ லிங்:
மாடுலர் கிச்சனுடன் வேறு என்னவெல்லாம் செய்கிறீர்கள்..?
WARDROBE, CUB BOARD, SHOW CASE. TV UNIT, POOJA, LOFT ஆகியவற்றையும் நேர்த்தியாக செய்து தருகிறோம். பூஜை அறை அமைப்பு இல்லாதவர்களுக்கு பூஜை லாப்ட் வசதிக்கு ஏற்ப, இடத்திற்கு ஏற்றாற் போல் அளவெடுத்து செய்து தருகிறோம்.
திருச்சியில் உங்களுக்கு கிடைத்துள்ள வரவேற்பை அடுத்து எதிர்கால திட்டம் என்ன..?
நாங்கள் அமைத்துத் தரும் மாடூலர் கிச்சனுக்கு மக்களிடம் மிகுந்த வரவேற்பு உள்ளது. புதிதாக கிளை தொடங்கவும் திட்டமிட்டுள்ளோம்” என்றார்.
உங்கள் கனவு இல்லத்தை அமைத்துக் கொடுத்து, உங்கள் சந்தோசத்தில் பங்கு கொள்கிறது ‘நேஷனல் அலுமினியம் மாடூலர் கிச்சன்’
உங்கள் இல்லத்திலும் மாடுலர் கிச்சன் அமைக்க வேண்டுமா..?
Cell : 90253 20742
94432 91946
Email :
nationalmodularkitchentry19@gmail.com
Website :
www.nationalmodularkitchen.com