அரசு திட்டங்களை பெற விவசாயிகளுக்கு புதிய அட்டை
மத்திய அரசுத் திட்டங்களின் பயன்களை விவசாயிகள் எளிதாகப் பெறும் வகையில் விவசாயிகளுக்கு 12 இலக்கங்கள் கொண்ட புதிய அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. மத்திய அரசு திட்டங்களின் கீழ் பதிவு செய்துள்ள விவசாயிகள் பற்றிய தகவல்களை சேகரித்து புதிய அடையாள அட்டை தயாரிக்கப்பட்டு வருகிறது.
“விவசாயிகளுக்கு 12 இலக்கங்கள் கொண்ட புதிய அடையாள அட்டை தயாரிக்கும் பணிகள் தொடங்கி உள்ளன . இதன் மூலம் அரசின் பல்வேறு நலத்திட்டங்கள், கடன் வசதிகளை விவசாயிகள் எளிதாகப் பெறலாம். விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்வது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் சிறப்பாக திட்டமிடவும் இது உதவும். எட்டு கோடி விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் சேர்க்கப்படுவார்கள்” என மத்திய விவசாயிகள் நலத்துறை கூடுதல் செயலாளர் விவேக் அகர்வால் கூறியுள்ளார்.