ரூ.2 லட்சம் ஊக்கத்தொகையுடன் மெடிக்கல் பிசினசுக்கு புதிய வாய்ப்பு
மத்திய அரசின் மக்கள் மருந்தகம் தொடங்குவதற்காக பிஎம்பிஐ அறிக்கையில் ஒரு அழைப்பு: ‘மக்கள் மருந்தகங்களை அதிகரிக்கும் திட்டப்படி, 406 மாவட்டங்களின் 3 ஆயிரத்து 579 வட்டங்களில் இவற்றைத் தொடங்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. சிறிய நகரங்கள் மற்றும் வட்ட தலைநகரங்களில் வசிப்பவர்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பெண்கள், எஸ்சி/எஸ்டி பிரிவினர், மலைப்பகுதி மாவட்டங்கள், தீவு மாவட்டங்கள், வடகிழக்கு மாநிலங்கள் ஆகிய பிரி வுகளின் கீழ், மக்கள் மருந்தகம் தொடங்க ஊக்கத்தொகையாக ரூ.5 லட்சம், சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.2 லட்சம் வழங்கப்படும்‘. கூடுதல் விவரங்களை http://janaushadhi.gov.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.