இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படும் தங்க நகைகளில் ஹால்மார்க் முத்திரை அவசியம் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசின் நுகர்வோர் நலத்துறை அமைச்சகம் இதுகுறித்து ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பில்,
நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் தங்க நகைகளில் 30 சதவீதம் மட்டுமே ஹால்மார்க் முத்திரை கொண்டவைகளாக உள்ளது.
அதனால் ஜூன் 15ஆம் தேதி முதல் 100 சதவீத நகைகளும் ஹால்மார்க் முத்திரையுடன் விற்பனைக்கு வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.
இதுபற்றி இந்தியாவின் ஹால்மார்க் முத்திரை மையங்கள் சங்கத்தின் தலைவர் உதய் ஷிண்டே கூறியதாவது,
இப்போது நாடு முழுவதும் 950 ஹால்மார்க் முத்திரை மையங்கள் உள்ளன ஒரு ஹால் மார்க் முத்திரை மையத்தை உருவாக்கிட 70 முதல் 80 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது இந்த வகையில் நடப்பு ஜூன் மாத இறுதிக்குள் நாடு முழுவதும் புதிதாக 400 மையங்களை உருவாக்கிட முடியும்.
அப்போதுதான் மத்திய நுகர்வோர் நலத்துறையின் குறிக்கோளான 100% ஹால்மார்க் முத்திரை என்ற இலக்கை எட்ட முடியும் என்று அவர் கூறினார்.